சிவராத்திரி விரத முறை
Page 1 of 1
சிவராத்திரி விரத முறை
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருப்பது நல்லது. சிவராத்திரி விரதம் அனுசரிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக் கூடாது. உலகத்தின் அமைதிக்காகவும், நன்மைக்காகவும் சிவாலயங்களில் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.
ஓம் நமசிவாய என்ற மந்திரம் உச்சரிக்க வேண்டும். மகா சிவராத்திரி இரவு கோவிலில் அனைவரும் ஒன்று கூடி 'சிவாய நம' என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். இரவின் நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் அவரை வழிபட வேண்டும்.
முதல் ஜாமத்தில் அரிசி, இரண்டாம், மூன்றாம் ஜாமங்களில் கோதுமை, நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயிறு, தினை ஆகியவற்றை அட்சதையாக சிவலிங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
முதல் ஜாமத்தில் தாமரை பூக்களாலும், இரண்டாம் ஜாமத்தில் தாமரை மற்றும் வில்வத்தாலும், மூன்றாம் ஜாமத்தில் அருகம் புல்லாலும், நான்காம் ஜாமத்தில் தாழம்பு, செண்பகம் நீங்கலான மற்ற மனம் கமழும் மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஆடிக்கிருத்திகை, கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தைப்பூச விரத முறை........
» காரடையான் நோன்பு விரத முறை
» காரடையான் நோன்பு விரத முறை
» கந்தசஷ்டி நிறைவு நாள் விரத முறை
» பங்குனி உத்திரத்தன்று விரத வழிபாடு முறை
» காரடையான் நோன்பு விரத முறை
» காரடையான் நோன்பு விரத முறை
» கந்தசஷ்டி நிறைவு நாள் விரத முறை
» பங்குனி உத்திரத்தன்று விரத வழிபாடு முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum