தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்ப்பதோஷம் சந்தோஷமாக மாற்றும் விரதம் வழிபாடுகள்

Go down

சர்ப்பதோஷம் சந்தோஷமாக மாற்றும் விரதம் வழிபாடுகள் Empty சர்ப்பதோஷம் சந்தோஷமாக மாற்றும் விரதம் வழிபாடுகள்

Post  ishwarya Mon Apr 29, 2013 1:42 pm

ஒரு ஆணின் ஜாதகத்திலோ, பெண்ணின் ஜாதகத்திலோ ராகு கேதுக்களுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால - சர்ப்ப தோஷமாகும். இப்படிப்பட்ட சர்ப்ப தோஷ ஜாதகம் அமைந்தவர்கள் சந்தோஷம் பெறுவது அரிதாகும்.

திருமணத்தடை, பிள்ளைபேற்றில் தடை என்று ஒவ்வொரு தடைகளையும் சந்திக்க நேரிடும். அப்படிப்பட்டவர்கள் ஜாகத்தில் ராகு-கேது இருக்கும் இடத்தை நன்கு ஆராய்ந்து அது யார் காலில் இருக்கிறது என்பதையும் கண்டறிந்து அதற்குரிய நட்புக் கிரகத்தின் நாளில் அதிகாலையில் நீராடி, புளிப்புக்கலந்த பதார்த்தத்தையும், அன்னம், உளுந்து கலந்த பலகாரத்தையும் தயாரித்து தேங்காய், பழம் வெற்றிலை பாக்குடன் நுனி இலையில் சூட்டி மந்தாரை மலருடன் ராகுபடத்திற்கு சூட்டி வழிபட்டு விரதம் இருப்பது நல்லது.

அதேபோல் கேதுவிற்கு விரதமிருந்து புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம் படைத்து ஐந்து வித மலர்களை மாலைகளாக்கி கேது படத்திற்கு சூட்டி வழிபட வேண்டும். நாகக் கவசத்தை நாள்தோறும் அல்லது வெள்ளிதோறும் பூஜித்தால் சர்ப்பகிரகங்கள் சந்தோஷத்தை வழங்கும். அருகில் இருக்கும் நாகத்துடன் கூடிய விநாயக பெருமானையும் வழிபட்டு பின்னோக்கி ராகுவிற்கு நான்கு பிரகாரமும் கேதுவிற்கு 7 பிரகாரமும் வர வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum