தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்ப்பதோஷம் சர்ப்பதோஷம்

Go down

சர்ப்பதோஷம்  சர்ப்பதோஷம்  Empty சர்ப்பதோஷம் சர்ப்பதோஷம்

Post  meenu Sun Feb 03, 2013 1:16 pm


சர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். தமிழ் சினிமாக்களில் கெட்ட காரியம் செய்து கொண்டிருந்த போது ஆண் பாம்பையோ, பெண் பாம்பையோ கொன்றுவிட்டதால் மேற்படி ஜோடியில் மிச்சமான பாம்பு ஸ்ரீபிர்யாவாகவோ இன்னொரு பேரிளம்பெண்ணாகவோ வந்து பழிவாங்கும். ஆனால் ஜோதிடவியலின்படி எந்த ஒரு குடும்பம் சர்ப்பங்கள் சஞ்சரிக்கும் பகுதியில் அவற்றை விரட்டி ,அங்குள்ள பாம்பு புற்றுகளை இடித்து குடிபோகிறார்களோ அவர்களின் வாரிசுகளுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும்.

இதில் ஒரு பெரிய தர்க்கம் இருக்கிறது. ஊரோடு ஒத்து வாழாது விலகிப்போக வேண்டிய அவசியம் அந்த குடும்பத்துக்கு ஏன் வந்தது ? ஒன்று அவர்கள் ஊருடன் மோதி தோற்று விலகியிருக்க வேண்டும். அல்லது அளவுக்கு மீறி ஊர்வாயை அடித்து விலகிச்சென்று பண்ணை வீடு டைப்பில் கட்டிக்கொண்டு போயிருக்க வேண்டும் அல்லவா ?இன்றைய மனோதத்துவ சாஸ்திரம் என்ன கூறுகிறது ? ப்ரோக்கன் ஃபேமிலியில் பிறக்கும் குழந்தைகள் மனச்சிக்கல்களுக்கு ஆளாகின்றன. மனச்சிக்கல் உடலையும் பாதிப்பது சகஜமே !

அக்காலத்தில் அ இன்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சர்ப்ப தோசம் இருப்பவர்கள் பாம்புக்கடிக்கு ஆளாகலாம். ஆனால் இதரர்கள் விசயத்தில் இந்த தோசம் பல வகைகளில் வேலை செய்கிறது.

தர்கரீதியில்,விஞ்ஞான கண்ணோட்டத்துடன் யோசிக்கும் ஒரு தொழில் முறை ஜோதிடன் என்ற வகையில் இன்று சர்ப்பதோஷம் குறித்த கருத்துக்களை பதிவு செய்கிறேன்.


ஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை 1987 முதல் எத்தனையோ சர்ப்ப தோஷ ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாய பரிகாரங்களையும், எனது நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்திருக்கிறேன்.
அந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மைகளை கூறுகிறேன்.

முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது. சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. ஆனால் இதற்குள்ள காரண காரியங்களை அறியாத பிராமணர்கள் இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிப்பது சகிக்க முடியாததாய் உள்ளது.

காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:

காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி "இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க " என்று ஆரம்பித்த நொடியிலேயே " ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு" என்று கூறுகிறார்கள்.

தோஷம் போகவே போகாது:

அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. கிரக நிலை கூட அவ்வளவுதான்.பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.

பின்னே சர்ப்பதோஷம் என்ற பெயர் எதற்கு:

சர்ப்பம் யோகத்துக்கும் அறிகுறி:

ஆம். பாம்பு யோகத்துக்கும் அறிகுறியாக உள்ளது. குண்டலிசக்தி கூடஒரு பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் இருப்பதாய் யோக நூல்கள் கூறுகின்றன. யோகத்தின் மீதான ஆவல்,முயற்சி நல்லதே. இதற்கும் ராகு கேது்க்கள் நல்ல நிலையில் இருக்கவேண்டும். ராகு கேதுக்கள் ஒருவருக்கொருவர் 7 ஆவது ராசியில் இருப்பார்கள். டிகிரியில் சொன்னால் 180 டிகிரி. எனவே இருவரும் நல்ல இடத்தில் அமைவது அரிதே ! அதனால் தான் உலக சுகங்களை(இதற்கு காரகன் ராகு) பெறுபவர்கள் யோகத்தில்(இதற்கு காரகன் கேது) நாட்டம் காட்டுவதில்லை. உலக சுகத்தில் ஈடுபாடு காட்டும்போது யோகம் ஈர்ப்பதில்லை. யோகத்தில் ஈடுபாடு ஏற்படும்போது உலக சுகம் ஈர்ப்பதில்லை. எனவேதான் உலக வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் கூட போலி சன்னியாசிகளிடம் ஏமாந்து விடுகிறார்கள். உண்மையான சன்யாசிகள் கூட திடீர் என்று உலக சுகங்களை அனுபவிக்க துடிக்கின்றனர்.

வாழ் நாளில் ஆரம்பத்தில் ராகு திசை நடந்து (படிக்கும் காலத்தில் அல்ல) உலக சுகங்களையெல்லாம் அடைந்துவிட்டால், பிறகு வரும் கேது தசையில் ஞானம் பெறலாம்.

இது தலைகீழாக அமையும் போது ஆரம்பத்தில் சன்னியாசம் , பின் உலக சுகங்களில் ஈடுபாடு என்ற நிலை ஏற்பட்டு விடும். உ.ம் பித்துக்குளி முருகதாஸ்.

கேது நல்ல இடத்தில் இல்லாவிட்டால் இதர கிரகங்களின் உதவியால் விழிப்பு நிலைக்கேகிய‌ குண்டலியின் தாக்கத்தை தாங்க முடியாது பித்தாவதோ, அல்லது வெறுமனே கஞ்சா குடிக்கும் சன்யாசியாவதோ நிகழ்ந்துவிடும். இதுவும் சர்ப்பதோஷத்தின் விளைவே.

சர்ப்பம் செக்ஸுக்கு அறிகுறி:

சர்ப்பம் செக்ஸுக்கும் அறிகுறியாக உள்ளது. சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ரகசிய உறவுகள்,கள்ளக்காதல்களுக்கும் சித்தமாகிவிடுவார்கள். ஆனால் இவர்கள் நிலை இருபுறம் எரியூட்டப்பட்ட மெழுகு வர்த்தி போன்றது. சீக்கிரமே அதில் ஆர்வமிழந்து இழந்த சக்தி வைத்தியர்கள் பின்னால் திரிய வேண்டி வரும்.

பாம்புக்குரிய குணநலன்கள் :
பாம்புக்கு ம‌னித‌ர்க‌ள் மீது ப‌ய‌ம். ம‌னித‌ர்க‌ளுக்கு பாம்பு மீது ப‌ய‌ம். என‌வே பாம்பு ம‌றைந்து வாழ்கிற‌து. ம‌னித‌ன் க‌ண்ணில் ப‌ட்டால் அடிப்ப‌ட்டு சாகிற‌து. அல்ல‌து ம‌னித‌னை கொத்தி கொன்று விடுகிற‌து. வ‌ளைந்து வ‌ளைந்து செல்கிற‌து. இரையெடுத்த‌ பின் அசையாம‌ல் கிட‌க்கிற‌து. பாம்புக்கு சிறுநீர்,ம‌ல‌ம் க‌ழிக்க விந்துவை வெளியேற்ற தனித் த‌னி துவார‌ங்க‌ள் கிடையாது. அனைத்துக்கும் பொதுவாக‌ க்ளோய‌கா என்ற‌ துவார‌ம் தான் உண்டு.

ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலை:
ஜாத‌க‌த்தில் ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலையும் ஏற‌க்குறைய‌ இப்ப‌டித்தான். இவர்களும் குடும்பத்தினரிடம் கூட மனம் திறந்து பேசமாட்டார்கள். அவ்வப்போது அன் வாரண்டெட் மோஷன்ஸ் இருக்கும், வாமிட்டிங் சென்ஸேஷன் இருக்கும். சிறு நீரில் விந்து வெளியேறலாம். உண்ட பின் உட்கார கூட முடியாது. தமக்கு தீங்கு செய்தவர்கள் சதிகள் செய்து ஒழித்துக்கட்ட முயல்வார்கள். இந்த சதி எதிராளிக்கு தெரிந்து விட்டால் அடித்தே கொன்று விடுவான்.

பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை தானே. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும். இதுதான் அசலான சங்கதி.

சர்ப்பத்தின் குணம் சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷய‌ங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரட் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,

மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),

உட‌ல‌மைப்பிலும் வித்யாச‌ம் இருக்கிற‌து. ஒன்று ஊளைச்ச‌தை,அல்ல‌து வ‌ய‌துக்கேற்ற‌ வ‌ள‌ர்ச்சி இன்மை காண‌ப்ப‌டுகிற‌து. சதிகள் செய்வது,ச‌திக்கு இல‌க்காவ‌து,ர‌க‌சிய‌ எதிரிக‌ள்,இர‌வில்,இருளில் செய்யும் வேலைக‌ளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிர‌ஃபி)ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள்,க‌ட‌த்த‌ல்,டூப்ளிகேட் த‌யாரித்த‌ல்,க‌ள்ள‌ கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum