நரகத்திலிருந்து தப்பிக்க விரதம்
Page 1 of 1
நரகத்திலிருந்து தப்பிக்க விரதம்
நாள்தோறும் இறைவனைப் பக்தியுடன் ஆராதித்து வருபவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலைச் சேர்ந்திடும். ஆனால், பாவிகளின் ஆன்மா நரகத்தை அடைந்து தண்டனை பெறும். மரணத்தின் போது உடலை விட்டு ஆன்மா நீங்கி வேறொரு உடலில் புகுகிறது. அவனவன் செய்த கர்மாக்களுக்கேற்ப அவர்கள் மறுபிறவி நிர்ணயிக்கப்படுகிறது.
உடலை விட்டு அகன்ற ஆத்மாவை யம தூதர்கள் யமனிடம் அழைத்துச் செல்லுகின்றனர். தீய கர்மாக்கள் செய்தவரின் ஆத்மா யம பட்டணத்தில் தெற்குவாயில் வழியாகச் சென்று நரகத்தை அடையும்.
நரகங்கள் மகரவிசி, அமரகும்பம், ரௌரவம், மகாரௌரவம், அந்தகாரம், அசிபத்திரவனம், காகோலம், குத்தலம், துர்க்கதம், நிருச்சாசம், மனஜ்வாலம், அம்வரிசம், வஜ்ரசஸ்திரகம், காலசூத்திரம், உக்கிரகந்தம் என்று பலவகை. அவரவர் செய்த தீய கர்மாக்களுக்கேற்ப நரகத்தில் தண்டனைகள் அளிக்கப்படும்.
தண்டனைகளும் பலவிதமாகின்றன. விலக்கப்பட்ட உணவை உண்டவன் உதிரத்தை அருந்த வேண்டும். நம்பிக்கைத் துரோகி, மூர்க்கன் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் வறுக்கப்படுவான். அயோக்கியர்கள் தீயில் பொசுக்கப்படுவர். பிறர் இல்லாளை விரும்பியவன் அவயவங்கள் ரம்பத்தால் அறுக்கப்படும்.
பிறரை இழித்தவன் கொதிக்கும் வெல்லப்பாகில் தள்ளப்படுவான். பொய்ச்சாட்சி கூறியவன், பிறர் பணத்தைக் கவர்ந்தவன், மது அருந்திய அந்தணன், துவேஷி, நட்பைக் கெடுத்தவன் ஆகியோர் கொதிக்கும் செப்புக்குழம்பில் தள்ளப்படுவர்.
நரகத்திலிருந்து தப்பவேண்டி நினைப்பவர் ஒரு மாத காலம் உபவாசம், ஏகாதசி விரதம், பீஷ்ம பஞ்சக விரதம் போன்றவற்றை அனுஷ்டித்தால் பலன் பெறலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்!
» கடனாளியாவதில் இருந்து தப்பிக்க வழி?
» சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க...
» ஊக்கமருந்து சோதனையில் இருந்து தப்பிக்க புது டெக்னிக்கை கையாளும் அமெரிக்க வீரர்கள்!
» நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் சளித் தொல்லையில் இருந்து தப்பிக்க கருந் துளசி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum