தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீடு தேடி வந்து படம் காட்டும் பிரகாஷ்ரா‌ஜ்

Go down

வீடு தேடி வந்து படம் காட்டும் பிரகாஷ்ரா‌ஜ் Empty வீடு தேடி வந்து படம் காட்டும் பிரகாஷ்ரா‌ஜ்

Post  ishwarya Mon Apr 29, 2013 12:05 pm

கமல் கஷ்டப்பட்டு நஷ்டப்பட்ட விஷயத்தை சும்மா சுளுவாக நடத்தி காட்டியிருக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ். என்ன... அவர் இருபது டாலர் கேட்டார், பிரகாஷ்ரா‌ஜ் அஞ்சே அஞ்சு டாலர்கள்தான்.

கௌரவம் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பில்லை. இந்நிலையில் பிரகாஷ்ரா‌ஜ் லைவ் என்ற இணையத்தை தொடங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஐந்து டாலர்கள் செலுத்தினால் இந்த இணையத்தில் தமிழிலும், தெலுங்கிலும் கௌரவம் படத்தை பார்த்துக் கொள்ளலாம். இந்த செம ஐடியாவுக்கு எப்படி திரையரங்கு உ‌ரிமையாளர்கள் எதிர்ப்பு தெ‌ரிவிக்காமல் போனார்கள் என ஆச்ச‌ரியமாக இருக்கும். காரணம் இருக்கிறது.

கௌரவம் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் நாடுகளில் உள்ளவர்கள் இந்த இணைய சேவையை பெற முடியாது. அதாவது இந்தியாவிலோ, அமெ‌ரிக்காவிலோ நீங்கள் இருந்தால் காசு கட்டி இணையத்தில் படம் பார்க்க முடியாது. ஆப்பி‌ரிக்காவிலோ கௌரவம் வெளியாகாத வெளிநாடுகளிலோ இருந்தால் ஐந்து டாலர்களில் தியேட்டருக்கே போகாமல் கௌரவத்தை பார்க்கலாம்.

டோரண்டை நாடாமல் ஐந்து டாலர் செலுத்தி படம் பார்க்கும் கௌரவமானவர்களை நம்பி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ். திட்டம் வெற்றி பெற்றால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு அது மறுமலர்ச்சியாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தியேட்டரில் படம் பார்க்க வீடு தேடி வரும் டாக்சி : அபிராமி மெஹாமால் புதுடெக்னிக்!!
» ர‌ஜினியின் வீடு தேடி வந்த விஸ்வரூப‌‌ம்
» சினிமா பார்க்க ஆசையா? வீடு தேடி டாக்ஸி வரும்…
» பாலுமகேந்திராவின் வீடு படம் திரையிடல்
» விரைவில் தாய் குழந்தையுடன் வீடு திரும்புவார் – குடும்பத்தார் தகவல் (குழந்தையின் படம் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum