மஞ்சள் மகிமை
Page 1 of 1
மஞ்சள் மகிமை
எந்தவொரு மங்கல காரியம் என்றாலும் அங்கே மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. இது ஏன் தெரியுமா? மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழ்வது மஞ்சள். மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப் பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும்போதும் அதில் மஞ்சள் தடவி அணிகிறோம்.
சுபநிகழ்ச்சி அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். அட்சதை தயாரிக்கும்போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க மஞ்சள்கிழங்குச் செடியை பொங்கல் நாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர்.
அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் மஞ்சள் கீறுதல் என்னும் சடங்காகச் செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசி வழங்குவார்கள். வீட்டில் உள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்பதே இந்தச் சடங்கின் நோக்கம்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum