சுனேனா உயிர் தப்பிய கதை!
Page 1 of 1
சுனேனா உயிர் தப்பிய கதை!
யாதுமாகி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிர் தப்பினார் காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமான நடிகை சுனேனா.
தலைவாசல் படத்தை தயாரித்த சோழா பொன்னுரங்கம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் ‘யாதுமாகி’. இதில் சுனேனா நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை, பாங்காக்கில் படமாக்க திட்டமிட்டார்கள். இதற்காக கதாநாயகன் சச்சின், கதாநாயகி சுனைன உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் 25 பேர் பாங்காக் பயணம் போனார்கள்.
பாங்காக்கில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ‘நோ மென் ஐலண்ட்’ என்ற தீவில் பட்பபிடிப்பு துவங்கியது. கடற்கரையில் இருந்து கடலுக்குள் 20 கிலோ மீட்டர் தொலைவில் அந்த தீவு அமைந்திருந்தது. படப்பிடிப்பு குழுவினர் 3 படகுகள் மூலம் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
மாலை 4 மணிக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடத்தினால் இருட்டில் கடலில் வழி தெரியாது, என்று ஏற்கனவே எச்சரித்து இருந்தார்களாம் வழிகாட்டிகள்.
அந்த எச்சரிக்கையையும் மீறி, மாலை 6 மணி வரை அங்கு படப்பிடிப்பு நடத்தினார்கள். படப்பிடிப்பு முடிந்ததும், 2 படகுகளில் தொழில்நுட்ப கலைஞர்கள் புறப்பட்டு கரைக்கு திரும்பி விட்டார்கள்.
கதாநாயகன் சச்சின், கதாநாயகி சுனைனா, டைரக்டர் பாலகுமார், ஒளிப்பதிவாளர் முகமது நசீர், பட அதிபர்களின் மகள்கள் சக்தி சங்கவி, மோகன சங்கவி ஆகியோர் தாமதமாக ஒரு படகில், கரைக்கு புறப்பட்டார்கள்.
கவிழ்ந்த படகில்…
அப்போது வானம் இருண்டது. திடீரென்று பலத்த மழை பெய்ததால் படகோட்டிக்கு வழி தெரியவில்லையாம்.
ஒரு வழியாக தூரத்தில் தெரிந்த விளக்கு வெளிச்சத்தை நோக்கி படகை வேகமாக ஓட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. படகில் இருந்த சுனைனா உள்பட அனைவரும் கடலில் விழுந்தார்கள்.
அவர்கள் அனைவரும் ‘லைப் ஜாக்கெட்’ அணிந்திருந்ததால், கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு தொங்கினார்களாம். தூரத்தில் படகு கவிழ்ந்ததைப் பார்த்து, கரையில் இருந்த ஒரு படகோட்டி விரைந்து சென்று சுனைனாவையும், மற்ற படப்பிடிப்பு குழுவினரையும் மீட்டாராம் (அந்த இருட்டிலும் ஷார்ப்பான பார்வைதான்!).
இந்த ‘பயங்கர’ விபத்து குறித்த தகவலை படத்தின் பிஆர்ஓ எல்லோருக்கும் அவராகவே கூறி வருகிறார்…!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விபத்தில் சிக்கிய உயிர் தப்பிய நடிகர் எம்.எஸ். பாஸ்கர்
» விமல் ஜோடி சுனேனா...
» ஐம்பது வயசு சுனேனா
» கதிர்வேல் படத்தில் முழு நீள கவர்ச்சியில் முக்குளித்துள்ளாராம் சுனேனா
» எனக்கு தமிழ் மட்டும் போதும் – சுனேனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum