இந்திப் படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு சிபாரிசு செய்யவில்லை; பிரபுதேவா மறுப்பு
Page 1 of 1

இந்திப்படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு சிபாரிசு செய்யவில்லை என்று பிரபுதேவா மறுத்தார். இருவரும் காதலிப்பதை பொதுவிழாக்களில் ஒன்றாக பங்கேற்றும் ஒரே ஓட்டலில் தங்கியும் உறுதிபடுத்தியுள்ளனர். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த சினிமா விருது வழங்கும் விழாவில் அருகே அமர்ந்து சிரித்து பேசியதை விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் வியப்பாக பார்த்தனர். பிறகு துபாய்க்கு ஜோடியாக ஷாப்பிங் சென்று திரும்பினார்கள்.
இந்தியில் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கிய போக்கிரி, ரீமேக் படம் ஹிட்டானதால் இந்தி பட உலகில் பிரபலமாகியுள்ளார். அங்கு புது படங்கள் இயக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. “போக்கிரி” 2-ம் பாகத்தை “மோஸ்ட் வாண்டட்” என்ற பெயரில் பிரபுதேவா இயக்கப் போவதாகவும், அதில் சல்மான்கான் ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க சிபாரிசு செய்ததாகவும் செய்திகள் வெளியாயின. இப்படம் மூலம் இந்தியில் நயன்தாரா அறிமுகமாகிறார் என்றும் கூறப்பட்டது.
அது போல் தமிழில் ஜெயம் ரவியை வைத்து இயக்கும் புதுப்படத்தில் நயன்தாராவை ஜோடியாக்க நிர்ப்பந்திப்பதாகவும், செய்திகள் பரவின. இது பற்றி பிரபுதேவாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்தியில் நான் இயக்கிய படம் ஹிட்டானதால் மீண்டும் அங்கு இன்னொரு படம் எடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான கதை எங்கே இருக்கிறது. அது மட்டுமல்ல சல்மான்கான் மூன்று படங்களில் பிசியாக இருக்கிறார். எல்லா படங்களும் தற்போது தயாரிப்பில் உள்ளன. அதே நேரம் இந்திப் படங்கள் இயக்கவே மாட்டேன் என்று கூறமாட்டேன். அது நடப்பதற்கு சில காலங்கள் ஆகலாம்.
இந்தியில் அறிமுகப்படுத்த நயன்தாராவுக்கு நான் சிபாரிசு செய்வதாக செய்திகள் வந்துள்ளன. அதில் சிறிதளவும் உண்மை இல்லை. ஜெயம் ரவியை வைத்து இயக்கப்போகும் படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறேன். அதற்கு கதாநாயகி இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் படங்களில் நடிக்க நடிகர்கள் மறுப்பு: டைரக்டர் சேரன் வருத்தம்
» பிரபுதேவா காதலால் மனமாற்றம் கவர்ச்சியாக நடிக்க நயன்தாரா மறுப்பு
» பிரபுதேவா பெயரை அழிக்க நயன்தாராவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி
» நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை: பிரபுதேவா – நயன்தாராவுக்கு மீண்டும் சம்மன்
» மலையாள படங்களில் நடிகை ரீமா கல்லிங்கல் நடிக்க தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum