குரு சிஷ்யன் விவகாரம்…வடிவேலு கடுப்பு – அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார்
Page 1 of 1

குரு சிஷ்யன் என்று ஒரு படம். பழைய படங்களை உல்டா செய்து தரும் சக்தி சிதம்பரத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பு இது.
இவருடைய பெரும்பாலான படங்களில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். என்னம்மா கண்ணு, இங்கிலீஷ்காரன் போன்ற படங்களில் வடிவேலுதான் ஹீரோ எனும் அளவுக்கு நகைச்சுவையில் புகுந்து விளையாடியிருப்பார் மனிதர்.
நிற்க.. இடையில், சுந்தர்.சிக்கும், வடிவேலுவுக்கும் தகராறு ஏற்படவே, சுந்தர்.சி படத்தில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தார் வடிவேலு.
இந் நிலையில், சுந்தர்.சி., சத்யராஜை வைத்து சக்தி சிதம்பரம் குரு சிஷ்யனை ஆரம்பித்தார். இப்படத்தில் வடிவேலுவும் இருந்தால்தான் பலம் என்று நினைத்து அவரை அணுகினார்.
சுந்தர்.சி படம் என்று யோசித்துள்ளார் வடிவேலு. இருப்பினும், வடிவேலுவை சமாதானப்படுத்தி சுந்தருடன் நடிக்க வைக்க முயற்சித்தனர். சக்தியே கூப்பிடுகிறாரே என்ற நல்லெண்ணத்தில் வடிவேலுவும் ஒப்புக் கொண்டு அட்வான்ஸும் வாங்கினார்.
ஆனால், அவர் கொடுத்த கால்ஷீட்டுகளை இயக்குனர் பயன்படுத்திக் கொள்ளாமல் இழுத்தடித்துள்ளார். வடிவேலுவை வைத்து ஒரு காட்சியைக் கூட படமாக்காமல் படப்பிடிப்பையே நடத்தி முடித்து விட்டாராம் சக்தி.
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்த வடிவேலு இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை. அட்வான்ஸை திருப்பித் தந்துவிடுகிறேன் என்று பத்திரிகைகளுக்கு அறிக்கையே கொடுத்தார். அட்வான்ஸை அவர் கொடுக்க முயற்சித்தபோதும் யாரும் பெற்றுக் கொள்ளவில்லையாம்.
எனவே நடிகர் சங்கத்தில் சிதம்பரம் மீது ஒரு புகார் கொடுத்தார் வடிவேலு. ‘குரு சிஷ்யன் படத்துக்காக நான் கொடுத்த ‘கால்ஷீட்’ தேதிகளை சக்தி சிதம்பரம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே அந்த படத்தில் நடிக்க நான் விரும்பவில்லை’ என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார்.
ஆனால், எப்படியாவது வடிவேலுவை நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார். காரணம் வடிவேலு நடிக்கிறார் என்று கூறித்தான் படத்தை வியாபாரம் செய்திருந்தார் சக்தி சிதம்பரம். இப்போது வடிவேலு இல்லாவிட்டால் படம் போண்டியாகி விடும் என்று பீதியாகி விட்டது அவருக்கு.
எனவே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், வடிவேல் மீது ஒரு புகார் கொடுத்தார். ‘குரு சிஷ்யன் படத்தில் நடிப்பதற்கு வடிவேல் சம்மதித்து, ‘அட்வான்ஸ்’ வாங்கியிருந்தார். எனவே அவரை அந்த படத்தில் நடித்துக் கொடுக்கும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும்’ என்று புகாரில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த புகார்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும், நடிகர் சங்க நிர்வாகிகளும் விசாரணை நடத்தி, ‘குரு சிஷ்யன்’ படத்துக்காக வடிவேல் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அதற்கு வடிவேலுவும் சம்மதித்தார்.
இதைத்தானேய்யா நானும் ஆரம்பத்திலேயே சொன்னேன்… என்று தன்னை விசாரித்தவர்களிடம் கடுப்போடு கூறிவிட்டுச் சென்றாராம் வடிவேலு!.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வடிவேலு ரியல் எஸ்டேட் விவகாரம்: காமெடி ஆக்கினாரா விவேக்?
» அட்வான்ஸை திருப்பித் தந்த ஒரு அடடா நடிகை
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum