கிரிவல பலன்கள்
Page 1 of 1
கிரிவல பலன்கள்
அண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வணங்கினால் மட்டுமே ஊழ்வினை தீரும் என்பது ஐதீகம். "அருணாசலத்தை வலம் வருகிறேன்'' என்று சொன்னாலே பாவம் தீரும்'' "வலம் வர வேண்டும்'' என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரும்மஹத்தி பாவமும் நீங்கிப் போகும். மது, மாது, சூது, கொலை, களவு போன்ற பாவங்கள் அனைத்தும் கிரிவலம் வருவதால் நீங்கும்.
அருணாசலத்தை வலம் வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமா? இந்தப் பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு. சர்வ தீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்.
வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும். இரண்டடிக்கு லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும். மூன்றடிக்கு கோவில் கட்டிய பேறு கிடைக்கும். அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு சமீபத்தில் இருக்கும். மலையைச் சுற்றி நடந்த சிவந்த பாதங்களைக் கண்டால் நாலாவித பாவங்களும் தீரும் தொழியும்.
பாதத்துளிகள் நரகத்தையும் பரிசுத்தப்படுத்தும். கிரிவலம் வருவோரின் காலடித் தூசுபட்ட மனித தேகத்தின் பிறவிப் பிணி நீங்கும் என கிரிவலத்தின் மகிமையை பலவாறு கூறுகிறது அருணாச்சல புராணம். திருவண்ணாமலை கோவில் அக்னி கோவில்.அக்னிக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை, இந்த கோவிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும், அன்றும் கிரிவலம் வரலாம்.
ஞாயிறு அன்று மலை வலம் வந்தால் சிவபதவிகள் கிடைக்கும்.
திங்கள் அன்று மலை வலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.
செவ்வாய் அன்று மலை வலம் வந்தால் கடன் வறுமை நீங்கும், தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம்.
புதன் அன்று மலை வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் பெறலாம்.
வியாழன் அன்று மலை வலம் வந்தால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம்.
வெள்ளி அன்று மலை வலம் வந்தால் விஷ்ணு பாதம் அடையலாம்.
சனி அன்று மலை வலம் வந்தால் நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும்.
அமாவாசை அன்று மலை வலம் வந்தால் மனதில் உள்ள கவலைகள் போகும். மன நிம்மதி கிடைக்கும்.
48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கழுகு மலை கிரிவல அனுபவம்
» தி.மலை கிரிவல மலையில் பிராயசித்த அபிஷேகம்
» 3 கிரிவல பாதை
» திருவண்ணாமலை கிரிவல மகிமை
» திருவண்ணாமலை கிரிவல வரைபடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum