தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீப தகவல்கள்

Go down

தீப தகவல்கள் Empty தீப தகவல்கள்

Post  gandhimathi Mon Jan 21, 2013 5:15 pm

1. அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கவே மகாதீபம் ஏற்றப்படுகிறது.

2. இரண்டாயிரத்து 668 அடி மலை உயரத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

3. தீபத்தை காண இந்த ஆண்டு சுமார் 22 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. மகாதீபத்துக்கு 1500 மீட்டர் துணி திரியாக பயன்படுத்தப்படுகிறது.

5. திரியில் கற்பூரத் தூள் சேர்த்து சுற்றப்பட்டிருக்கும்.

6. மகாதீபத்தை காண கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலையில் பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருள்வதாக ஐதீகம்.

7. திருவண்ணாமலை மகாதீபம் பல மைல் தொலைவுக்கும் அப்பால் தெரியும்.

8. மகாதீபம் 11 நாட்கள் வரை எரியும்.

9. மகாதீபம் உலகம் முழூவதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியை பரப்பும் சிவஞான ஜோதியாக இருப்பதாக ஐதீகம்.

10. கார்த்திகை தீபத்தன்று அகல்விளக்கில் தீபம் ஏற்றுவது அறம், பொருள், இன்பம், வீடு என்ற தத்துவத்தை உணர்த்துவது போலாகும்.

11. மகாபலிராஜா தன் உடம்பில் ஏற்பட்ட வெப்ப நோயை கார்த்திகை விரதம் இருந்து தீர்த்துக் கொண்டார்.

12. அம்பிகை மகிஷாசுரனுடன் சண்டையிட்ட போது தன் கையில் இருந்த லிங்கத்தை தவறுதலாக கீழே போட்டு உடைத்துவிட்டார். அந்த தோஷ நிவர்த்திக்காக அவர் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றி வழிபட்டதாக தேவி புராணம் கூறுகிறது.

13. கார்த்திகை தீப தினத்தன்று ஒளி இருக்கும் இடங்களில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள்.

14. வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் பௌர்ணமி முதல் மூன்று நாட்களாவது தங்களுடைய வீட்டில் வரிசையாக தீபம் ஏற்ற வேண்டும்.

15. நாரதர் கார்த்திகை விரதத்தை 12 ஆண்டுகள் இருந்து சப்தரிஷிகளூக்கும் மேலான பலன்களை பெற்றார்.

16. கார்த்திகை விரதம் இருந்ததால் பகீரதன், திரிசங்கு ஆகியோர் அரசர் ஆனார்கள்.

17. திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம்.

18. கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம்.

19. மார்கழி மாதம் கிரிவலம் வந்தால் ஆண்டு முழுவதும் கிரிவலம் வந்த பலன் கிடைக்கும்.

20. கிரிவலத்தில் எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் 1000 அசுவ மேத யாகம் செய்த பலனுக்கு சமம் என்று அருணாசலபுராணத்தில் கூறப்பட் டுள்ளது.

21. கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச்செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

22. கார்த்திகையில் சோமவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.

23. கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம்தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.

24. கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.

25. கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.

26. கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.

27. கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர்பதவி கிடைக்கும்.

28. கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற் கரிய பலன் கள் கிடைக்கும்.

29. கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மனஅமைதி உண்டாகும்.

30. கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமவாரம் அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோம வாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

31. தீப திருநாளன்று வீட்டில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். முற்றத்தில் 4, பின் கட்டில் 4, கோலமிட்ட வாசலில் 5, திண்ணையில் 4, வாசல் நடை, மாடக்குழி, நிலைப்படி, சுவாமி படம் அருகில் தலா 2 விளக்குகள், சமையல் அறையில் 1 மற்றும் வெளியே எம தீபம் 1 என்று மொத்தம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும்.

32. திருவண்ணாமலையில் 360 தீர்த்தகங்கள் உள்ளன. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பெண்கள் விட்ட சாபம் நீங்கும். இந்திர தீர்த்தம் பிரம்ம ஹத்தி தோஷத்தை விரட்டும். எம தீர்த்தம் ஆரோக்கியம் தரும். நிருதி தீர்த்தம் பகைவர் தொல்லையை ஒழிக்கும். வருண தீர்த்தம் நவக்கிரக தோஷங்களை போக்கும். வாயு தீர்த்தம் கடன் தொல்லையை தீர்க்கும். குபேர தீர்த்தம் செல்வம் தரும். அசுவனி தீர்த்தம் சிவன் அருள் பெற்று தரும்.

33. கார்த்திகை தீப நாளன்று வஸ்திர தானம் செய்தால் பித்ரு தோஷங்கள் நீங்கும்.

34. கார்த்திகை பவுர்ணமியன்று வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. 35. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.*
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum