10 ஆண்டு கழித்து அரசியல்: நடிகை சினேகா திட்டம்
Page 1 of 1

நான் அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்பது இன்னும் 10 வருடங்கள் கழித்து தெரியும். என்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி பத்து வருடங்களுக்குப் பின் அறிவிப்பேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார்.
யார் வேண்டுமானாலும் இப்போது அரசியலுக்கு வந்து விடலாம். மக்களுக்கான போராட்டத்தை நடத்திய அனுபவம் தேவையில்லை, அடிப்படை தகுதி தேவையில்லை. சினிமாக்காரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், நான்கு படங்களில் நடித்தாலே நாற்காலி கனவுக்குப் போய் விடுகிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது சினேகாவும் அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது வர மாட்டாராம். பத்து வருடங்களுக்குப் பிறகு அது குறித்து தெரிவிப்பாராம்.
தமிழக திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட `வைஜயந்தி ஐபிஎஸ்’ படம் ரீமேக்காக `பவானி’ என்ற பெயரில் மீண்டும் தயாராகிறது. விஜயசாந்தி நடித்த வேடத்தில், சினேகா நடிக்கிறார். கிச்சா இயக்குகிறார். இசையமைப்பாளர் தினா. ஒளிப்பதிவு பூபதி.
இப்படம் குறித்து சினேகா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
‘நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிறது. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். இந்த 9 வருடங்களில் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களிலும், மாறுபட்ட வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் அவ்வப்போது ஏற்படும்.
சேலையை விட்டால், சுடிதார். சுடிதாரை விட்டால், பாவாடை அல்லது தாவணி என ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து அலுத்துப்போய் விட்டது.
இந்த சூழ்நிலையில் தான் டைரக்டர் கிச்சா, என்னை தேடி வந்தார். வைஜயந்தி ஐபிஎஸ் படத்தை மறுபடியும் தயாரிக்கப் போகிறோம். நீங்க போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார்.
என்னை வச்சு காமெடி…கீமெடி பண்ணலையே…? என்று சீரியசாகவே நான் அவரிடம் கேட்டேன். போட்டோ ஷூட் எல்லாம் முடிந்த பிறகும் கூட, எனக்கு நம்பிக்கை இல்லை.
அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக நம்மாலும் போலீஸ் வேடம் பண்ண முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்ட
ஏற்பட்டது.
எப்படி நடக்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும், துப்பாக்கியை எப்படி பிடிக்க வேண்டும்? என்றெல்லாம் கிச்சா எனக்கு சொல்லி தந்தார்.
நீங்க சிரிக்கவே கூடாது என்றார். அதன்படி, படம் முழுக்க நான் சிரிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, `பவானி’ ஒரு பரீட்சார்த்தமான படம்தான்.
இந்த படத்தின் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது, நிறைய அடிபட்டேன். அதேபோல் பல ஸ்டண்ட் நடிகர்களை நிஜமாகவே நான் அடித்து விட்டேன்.
வைஜயந்தி ஐபிஎஸ் படத்துக்கு பிறகுதான் விஜயசாந்தி அரசியலுக்கு வந்தார். அதேபோல் நானும் வருவேனா என கேட்கிறார்கள்.
முதலில் பவானி படம் திரைக்கு வரட்டும். அப்புறம் பார்க்கலாம். நான் அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்பது இன்னும் 10 வருடங்கள் கழித்து தெரியும். என்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி பத்து வருடங்களுக்குப் பின் அறிவிப்பேன்’ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐந்தாண்டு கழித்து அரசியல்! – சோனா பகீர்!
» நாள்முழுக்க நின்றால் 1 லட்சம் மதிப்புள்ள டெலிவிஷன்! – சினேகா தொடங்கி வைத்த திட்டம்
» வில்லியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சினேகா…!
» நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்கு – டிவி நடிகர் தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறை
» ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சினேகா:போலீசார் விரட்டியடித்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum