தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்களை நீங்கள் நம்புங்கள்

Go down

 உங்களை நீங்கள் நம்புங்கள்  Empty உங்களை நீங்கள் நம்புங்கள்

Post  meenu Mon Jan 21, 2013 5:04 pm

உங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட இதோ எளிய வழிகள்...!

* உங்கள் சொந்தவாழ்க்கை, தொழில், வியாபாரம், பணத் தேவை போன்ற அனைத்தையும் பற்றி முதலிலே ஒரு செயல்திட்டம் வகுத்துவிடுங்கள். அதற்கு தக்கபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் எதிர்காலம் வளமாக அமையும். வளமான வாழ்க்கை தன்னம்பிக்கையை வளர்க்கும்.

* வாழ்க்கை எப்போதும் அமைதியாக ஓடவேண்டும் என்று நினைக்காதீர்கள். சில செயல்களில் டென்ஷன் ஆனாலும் பரவாயில்லை.கொஞ்சம் `ரிஸ்க்' எடுங்கள். ரிஸ்க்கான விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றிவாகை சூடும்போது உங்களிடம் தைரியம் பிறக்கும்.

* உங்களை நீங்கள் நம்புங்கள்...! உங்கள் மீது நீங்கள் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாமல் எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் திறமையை நீங்களே நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்கள். நம்பிக்கையே உங்களின் திறமைக்கும், செயல்திறனுக்கும் சரியான அஸ்திவாரம்...!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum