பெண்களே உங்கள் கணவரை நம்புங்கள்
Page 1 of 1
பெண்களே உங்கள் கணவரை நம்புங்கள்
குடும்ப உறவுகளுக்கு என்று சில வரைமுறைகள் உண்டு. தம்பதியரிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை இருந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கையில் சந்தோசம் நிலைக்கும். இல்லற வாழ்க்கையில் சந்தேகம் என்பது தம்பதியருக்கு இடையில் ஏற்படவே கூடாது. மனைவிக்கு கணவரிடம் சந்தேகம் ஏற்பட்டால் அந்த வீட்டில் சாத்தான் குடியேறிவிடுவான்.
எனவே உங்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமைய சில எளிய வழிமுறைகள்... பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) கணவன் மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.
காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிக்கை வையுங்கள். அதேபோல் மனைவி எந்த ஆணுடனும் பேசக் கூடாது, வீட்டு வாசலில் நிற்கக் கூடாது, செல்போனில் பேசக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் கணவன்மார்கள்.
அனைத்தையும் பொறுத்துக் கொண்டு மனைவி இருக்க வேண்டும். எதிர்த்துப் பேசினால் திட்டும் அடி உதையும் கிடைக்கும். அதே நேரம் கணவன்களை மனைவிகள் அவ்வளவாக சந்தேகப்படுவது கிடையாது. அரசல் புரசலாக வதந்தி கிளம்பி சந்தேகம் வந்தால் கூட கணவன் சொல்லும் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடுவார்கள்.
அதேபோல் தனது துணைக்கு அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் இருந்து அழைப்போ அல்லது மின்னஞ்சல் வந்தாலோ இவர்களுக்கு வியர்த்துவிடும். அதாவது சந்தேகப் பொறி எழுந்துவிடும். உடனடியாக அதனை அலசி, தனது மூளைக்கு எட்டியவரை அவரைப் பற்றியும், போன் செய்தவரைப் பற்றியும் தொடர்பு படுத்தி பல்வேறு எதிர்மறை விஷயங்களை எண்ணி எண்ணி அதனை பெரிதாக்கி விடுவார்கள்.
இதுவே பிரச்சினை விதை முளைக்க காரணமாகிவிடும். தனது சந்தேகத்தை நேரடியாக துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம். இதில் ரெண்டுமே தவறுதான்.
தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். கணவரோ, மனைவியோ சந்தேகப்பட்டால் அவர்களுடன் அமர்ந்து பேசி , தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம்.
அல்லது, இவர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபரைக் கொண்டு அறிவுரை வழங்கச் சொல்வதும் நல்ல பலனை அளிக்கும். இல்லை என்றால், இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள். கணவனோ மனைவியோ அவர்களுக்கு என்று சில தனித்துவம் உண்டு. அவரவர்களுக்கு என உள்ள எல்லைக்குள் இருந்து கொண்டால் சிக்கல் இல்லை.
சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இல்லை. சந்தேகம் அதிகமாக அதிகமாக மனதில் சஞ்சலம் குடியேறுவதோடு ஒருவித அழுத்தம் ஏற்பட்டு விடும். இதுவே நாளடைவில் மனரீதியான கோளாறுகளை ஏற்படுத்திவிடும். இதனால்தான், திருமணத்திற்கு முன்பு நடந்த சில சம்பவங்களை உண்மையாக நடந்துகொள்வதாகக் கூறி துணையிடம் கூற வேண்டாம்.
ஏனெனில் நமக்கு வாய்த்தது இந்த சந்தேகப்பிராணிகளில் ஒன்றாக இருந்துவிட்டால், வாழ்க்கை முழுவதும் நிம்மதி, சந்தோஷம் தொலைந்து விடும். எனவே நடந்து முடிந்த விஷயங்களை துணையிடம் கூற வேண்டிய அவசியமில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

» கணவரை நேசியுங்கள் பெண்களே!
» உங்கள் உயரத்திற்கு ஏற்ப உங்கள் நிறை இருக்கிறதா என அறிய.
» பெண்களே உங்கள் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறைய!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum