மாதா மாதம் 48 லட்சம் வட்டி.. ‘பையா’ படுத்தும் பாடு!
Page 1 of 1

கார்த்தி- தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் பையா. லிங்குசாமியின் அண்ணன் சுபாஷ் தயாரிக்க, லிங்குசாமியே இயக்கியுள்ள படம். அதாவது சொந்தப் படம்.
இந்தப் படம் துவங்கியதிலிருந்தே பெரும் பஞ்சாயத்து நடந்தது. சம்பளப் பிரச்சினையால் நயன்தாரா நடிக்காமல் ஒதுங்க, தயாரிப்பாளர் கவுன்சில் வரை போய் அவரிடம் தந்த அட்வான்ஸை வாங்கினார் லிங்குசாமி. ஆனால் நயன்தாராவிடம் வாங்கிய அட்வான்ஸை, வேறு வழியில் பெருமளவு விட்டுக் கொண்டுள்ளார்.
இந்தப் படத்துக்காக ரூ. 14 கோடி வரை வங்கியில் கடன் வாங்கியுள்ளாராம் லிங்குசாமி. இது தவிர இன்னும் கொஞ்சம் பைனான்ஸ் வாங்கி பெரும் பட்ஜெட்டில் நடித்து வருகிறாராம்.
கடன் சுமையின் பாரம் புரிந்து திட்டமிட்டதைவிட வேகவேகமாகப் படமெடுத்துவிட்டார் லிங்குசாமி. ஆனால் படத்தை வெளியிட முடியவில்லை. காரணம் செல்வராகவன்.
படத்தின் ஆரம்பம் தாமதப்பட்டதற்கு உண்மையான காரணம் இந்த செல்வராகவன்தான். இவர் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பை ஜவ்வாக இழுக்க, கிட்டத்தட்ட 8 மாதங்கள் கார்த்திக்காக காத்திருந்தார் லிங்குசாமி.
அதன் பிறகு வேகவேக படமெடுத்து முடித்து வெளியிடுவதற்கான விளம்பரங்கள் செய்தபோது, தனது ஆயிரத்தில் ஒருவனை வெளியிடுவதாக அறிவித்தார் செல்வராகவன். உடனே தயாரிப்பாளர் கவுன்சிலில் பஞ்சாயத்து. இதில் செல்வராகவன் படம் முதலில் வெளியாகத் தீர்ப்பானது.
உடனே பட வெளியீட்டை தற்காலிகமாக 2 வாரம் தள்ளி வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டார் லிங்கு. ஆனால் கொடுமை பாருங்கள்… ஆயிரத்தில் ஒருவன் படுத்துக் கொள்ள, அதற்கு முன்பு வரை பையாவை வாங்க பண்ப்பெட்டியோடு காத்திருந்த விநியோகஸ்தர்கள் இப்போது தயங்குகிறார்களாம்.
இதனால் இன்னும் ரிலீஸ் தள்ளிப் போகிறது படத்துக்கு.
இதில் பெருமளவு பாதிப்பு… படத்தின் தயாரிப்பாளர் கம் இயக்குநர் லிங்குசாமிக்குதானாம். இந்தப் படத்துக்காக வாங்கிய மொத்த கடனுக்கும் சேர்த்து மாதம் ரூ 48 லட்சம் வட்டி கட்டுகிறாராம் லிங்கு.
திட்டமிட்டு படமெடுக்கணும் என்றாலே சில இயக்குநர்களுக்கு கசக்கிறது. ஆனால் அதன் பின் விளைவு எத்தனை கொடூரமானது பாருங்கள்.. வட்டி மட்டுமே ரூ 48 லட்சம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேலை படுத்தும் பாடு !
» நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம்
» இயக்குனர் ஷங்கரை படாத பாடு படுத்தும் நடிகை.!
» பையா – திரை விமர்சனம்
» போன மாதம் நிச்சயதார்த்தம், இந்த மாதம் முறிவு: இது பூஜா காந்தி ஸ்டைல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum