அமெரிக்க மாப்பிள்ளை மோகம்… சீரியலில் அட்வைஸ் தரும் சிம்ரன்!
Page 1 of 1

அமெரிக்க மாப்பிள்ளை, கிரீன் கார்டு மோகம்… இதில் நிஜத்தைப் பற்றி ஆராயாமல் புதைகுழிக்குள் விழுந்த புலம்பித் தவிக்கும் அப்பாவிப் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை மாதிரி தொலைக்காட்சித் தொடர் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது… தமிழில் அல்ல, தெலுங்கில்.
சிம்ரன், சுஜிதா நடித்துள்ள இந்த சீரியலுக்கு சுந்தரகாண்டா என்று பெயர் சூட்டியுள்ளனர். ஜெமினி டிவியில் வெளியாகும் இந்த சீரியல் இப்போது ஆந்திராவில் சக்கை போடு போடுகிறது. அங்கு தான் அமெரிக்க மோகமும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்த சீரியலின் கிரியேட்டிவ் ஹெட் மற்றும் தயாரிப்பாளர் சுஜாதா கோபால் கூறுகையில், “எத்தனையோ சீரியல்கள் வந்திருந்தாலும், அமெரிக்காவில் பெரும் பகுதி எடுக்கப்பட்ட சீரியல் எங்களுடையதுதான். முதலில் 350 எபிசோடுகளோடு நிறுத்திக் கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தோம் சுந்தரகாண்டா சீரியலை. ஆனால் மக்கள் கொடுக்கிற வரவேற்பை பார்த்தால் ஆயிரம் எபிசோடுகள் வரை போகலாம் என்று தோன்றுகிறது..” என்கிறார்.
அமெரிக்காவில் வசிக்கிற இந்தியர்களில் முக்கால் பாகம் தெலுங்கர்கள்தானாம். அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்த ஜோரில் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோரின் அதிர்ச்சியையும், அமெரிக்காவில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் சொல்கிற இந்த சீரியலில், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமெரிக்க லாயராக வருகிறாராம் சிம்ரன்.
அமெரிக்காவில் சிக்கிக் கொண்டு தவிக்கும் பெண்ணாக நடித்திருக்கும் சுஜிதாதான் நாயகி. அவரது கணவராக நடித்திருப்பவர் ரிஷி (டீலா, நோ டீலா புகழ்).
மொத்தம் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தாராம் சிம்ரன். இதில் ஐந்து நாட்கள் அமெரிக்காவில் ஷூட்டிங். குடும்பத்தோடு வந்திருந்தாலும், தனது செலவை தவிர மற்றவர்களுக்கு அவரே பில் செலுத்தினாராம்!
சுஜாதா கோபால் நிறைய டாகுமெண்டரி படங்கள் எடுத்திருப்பவர். தமிழ்நாட்டைப் பற்றி பிஎச்டி படிக்க வரும் மாணவர்களுக்கு வசதியாக இருக்கிறதாம் இவர் உருவாக்கிய டாகுமென்ட்டரி படங்கள்.
வில்லு பாட்டு, தோல்பாவை கூத்து, மறைந்த மாநகரங்கள், தமிழர்களின் நாக வழிபாடு என்று எல்லா படங்களும் 28 நிமிடங்கள் கால அளவை கொண்டவை.
லேட்டஸ்ட்டாக எம்.ஜி.ஆர் பற்றியும் ஒரு டாகுமென்ட்டரி எடுக்கப் போகிறாராம் சுஜாதா.
இந்த சீரியலின் இயக்குனர் பி.சி.ரகு. தமிழிலும் இதே போன்ற சீரியல் ஒன்றைக் கொண்டுவர முயர்சி மேற்கொண்டுள்ளார்களாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிம்ரன் தந்த அட்வைஸ் – சிலிர்க்கும் ஷ்ரத்தா
» திருமணத்துக்கு தயாராகிறார்: திரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர்; அமெரிக்க தொழில் அதிபர் தேர்வு?
» சீரியலில் நடிக்கும் இளம் ஹீரோவின் மனைவி!
» மெகா சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வரும் மாளவிகா!
» திரிஷாவின் மும்பை மோகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum