மை நேம் ஈஸ் கான் – வசூலில் புதிய சாதனை!
Page 1 of 1
மை நேம் ஈஸ் கான் – வசூலில் புதிய சாதனை!
பெரும் பிரச்சினைகளுக்கிடையே வெளியான ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. நான்கு வாரங்களில் ரூ 174.6 கோடியை வசூலித்துள்ளது.
இதில் இந்தியாவிலிருந்து மட்டும் ரூ 102.2 கோடியை குவிந்துள்ளது இந்தப் படத்துக்கு. வெளிநாடுகளில் ரூ 72.4 கோடி கிடைத்துள்ளது.
படம் வெளியான இரண்டாவது வாரமே, மைநேம் ஈஸ் கானுக்கு கூட்டம் குறைந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு என்றெல்லாம் விமர்சனங்கள் கிளம்பின. ஆனால் சர்வதேச பிரச்சினையை ஒரு இந்திய முஸ்லிமின் பார்வையில் கரண் ஜோஹரும் ஷாரூக்கும் விவரித்திருந்த விதம் இந்தியர்களை மட்டுமல்ல, வெளிநாட்டவரையும் கவர்ந்து விட்டது.
இந்திய திரையுலக சரித்திரத்தில் வேறு எந்தப் படத்துக்கும் கிடைக்காத ஓப்பனிங் ஷாரூக்கின் இந்தப் படத்துக்குக் கிடைத்தது. பிரிட்டிஷ் பாக்ஸ் ஆபீஸில் முதல் வாரம் இந்தப் படம் 5 வது இடத்தைப் பெற்றது. இதுவரை இந்தியப் படங்களில் வேறு எதற்கும் இந்த இடம் கிடைத்ததில்லை.
மத்தியக் கிழக்கு நாடுகளில் இதுவரை வேறு எந்த இந்தியப் படமும் பெறாத அளவு 3.3 மில்லியன் டாலர் வசூலைப் பெற்றுள்ளது மை நேம் ஈஸ் கான்.
லெபனான் மற்றும் ஜோர்டான் நாடுகளில் மார்ச் 10ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு அந்நாட்டு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியாவின் சிஇஓ விஜய் சிங் கூறுகையில், “நிறைய நாடுகளில் இந்தப் படத்துக்கு ஆதரவு அமோகமாக உள்ளது.
இந்தோனேஷியாவில் மட்டும் முந்தைய இரு வாரங்களை விட இந்த வாரம் 300 சதவிகிதம் அதிக வசூல். 6 தியேட்டர்களில்தான் முதலில் ரிலீசானது. இப்போது 14 தியேட்டர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் இந்தப் படம் புதிய சாதனை படைத்துள்ளது” என்கிறார்.
ரூ 50 கோடியில் தயாரான மை நேம் ஈஸ் கானை ஃபாக்ஸ் நிறுவனம் ரூ 100 கோடிக்கு வாங்கி வெளியிட்டது.
இந்தப் படத்துக்குப் பின் வெளியான கார்த்திக் காலிங் கார்த்திக், தீன் பட்டி, அதிதி தும் கப் ஜாகி போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் படுத்துவிட, மீண்டும் ஒரு முறை தன்னை பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்துள்ளார் ஷாரூக்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அவன் இவன்…. வசூலில் சாதனை!
» வசூலில் புதிய படங்களை பின்னுக்கு தள்ளிய சிவாஜியின் கர்ணன்…!
» பாடிகார்ட்: 5 நாட்களில் ரூ. 88 கோடி வசூல் – புதிய சாதனை
» எந்திரன் ட்ரெய்லர் – புதிய சாதனை
» பீட்டல்ஸ் 50: இசை ரசிகர்களின் சமர்ப்பணத்தில் புதிய சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum