தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வசூலில் புதிய படங்களை பின்னுக்கு தள்ளிய சிவாஜியின் கர்ணன்…!

Go down

வசூலில் புதிய படங்களை பின்னுக்கு தள்ளிய சிவாஜியின் கர்ணன்…! Empty வசூலில் புதிய படங்களை பின்னுக்கு தள்ளிய சிவாஜியின் கர்ணன்…!

Post  ishwarya Thu Apr 04, 2013 6:22 pm

புதுப்பொலிவுடன் வெளியாகி இருக்கும் சிவாஜியின் கர்ணன் படம், வசூலில் புதிய படங்களையே பின்னுக்கு தள்ளிவிட்டது. 1960களில் நடிகர் திலகம் சிவாஜி, முத்துராமன், என்.டி.ராமாராவ், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி காலத்தை வென்ற சரித்திர திரைப்படம் கர்ணன். இப்படம் இப்‌போது நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படம் புதிய படங்களின் வசூலையே மிஞ்சிவிட்டது.

இதுகுறித்து இப்படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது, கர்ணன் படம் இப்போது எல்லா தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சியாக காணப்படுகிறது. இதற்காக 2 வருடமாக கடுமையாக உழைத்தோம். அது வீண்போகவில்லை. இந்த நேரத்தில் சிவாஜியின் மகன் ராம்குமாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். இதையடுத்து நிறைய பேர் எங்களிடம் அடுத்து யாருடைய படத்தை டிஜிட்டல் முறையில் வெளியிட போறீங்க என்று கேட்குறாங்க. சிலர் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை டிஜிட்டல் செய்ய சொல்லி கேட்குறாங்க. சிலர் புதிய பறவையை விரும்புறாங்க. அதனால் அடுத்து புதிய பறவை படத்தை வெளியடும் முயற்சியில் இருக்கிறோம். புதிய பறவை பாடலை கேட்பதற்கு என்றே இன்றும் சிவாஜியின் ரசிகர்கள் கூட்டம் இருக்கு. எனவே அடுத்தபடியாக புதிய பற‌வை படத்தை அவருடைய பிறந்தநாளில் வெளியிட எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum