மாலை 6 மணிக்கு மேல் சொந்த விஷயங்களில் நடிகர் சங்கம் தலையிடாது! – சரத் குமார்
Page 1 of 1

மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறினார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.
நித்யானந்த சாமியாருடன் நடிகை ரஞ்சிதா செக்ஸ் லீலை செய்தது உண்மையென நிரூபணமானால் நடிகர் சங்கத்தின் நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்தார்.
சரத்குமார் – சினேகா நடிக்கும் புதிய படமான விடியலுக்காக நேற்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
அப்போது, “புவனேஸ்வரி விவகாரத்தில் பத்திரிகைகளுக்கு எதிராக கண்டனக் கூட்டம் நடத்தி பெரிதாக ரியாக்ட் பண்ண நடிகர் சங்கம், ரஞ்சிதா விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சரத்குமார், “புவனேஸ்வரி விவகாரத்தில் எல்லா நடிகைகளையும் ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டியதால்தான் அந்த கண்டனக் கூட்டமே நடந்தது. ஆனால் அதுகூட பின்னர் சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் ரஞ்சிதா விவகாரம் அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். அதில் நடிகர் சங்கம் என்ன செய்ய முடியும்?”, என்றார்.
“நடிகை ரஞ்சிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ரஞ்சிதா குற்றவாளிதானே…அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?” என்றதற்கு,
இந்த விவகாரத்தில் யார் மீது தப்பு என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை. சாமியார் தப்பு செய்தாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இன்னொன்று, சாமியாருடன், ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சியை ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பியதை பார்ப்பதற்கு நெருடலாக இருந்தது. திரும்ப, திரும்ப அதை ஒளிபரப்பியது, சின்ன குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஒருவரின் கழுத்தை திரும்ப, திரும்ப அறுத்து காண்பிப்பது போல் இருந்தது.
சாமியாரும், ரஞ்சிதாவும் விருப்பப்பட்டு ஒரு அறையில் தங்கியிருந்த பிரச்சினையில் யாரும் தலையிட முடியாது. அவர்கள் இருவரும், ‘நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இல்லற உறவில் ஈடுபட்டால் என்ன தவறு?’ என்று கேட்டால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறாரா, இல்லையா? என்பது பிரச்சினை அல்ல. ஆனால், ஒருவரின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது.
ரஞ்சிதா தன்னை சாமியார் பலவந்தம் செய்தார் என்று ஒருவேளை புகார் செய்திருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும்.
மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. ஒருவரின் சொந்த விஷயத்தில் தலையிடுவது நடிகர் சங்கத்தின் வேலை கிடையாது…” என்றார்.
“சாமியாருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவுமில்லை. அவரது உணவு கூட தனிப்பட்ட விஷயம் இல்லை, அவர் உண்மையிலேயே துறவி என்றால். அப்படியெனில் ரஞ்சிதாவுடனான அவரது தனிப்பட்ட வாழ்க்கை எங்கிருந்து வந்தது? துறவியை காமத்தில் தள்ளிய ரஞ்சிதா எப்படி குற்றமற்றவராகிறார்?”
-இந்தக் கேள்விக்கு சரத்குமார் பதிலளிக்கத் தடுமாறினார்.
அதுமட்டுமல்ல, “எனக்கு இதில் முழுமையான விவரங்கள் தெரியாது. படுக்கையறைக்குள் என்ன நடந்தது என்பதில் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. எனவே சட்டப்படி என்ன நடக்குமோ அது நடக்கும்” என்று நழுவினார்.
சரத்குமார் ஆசிரியராக உள்ள அவரது சொந்தப் பத்திரிகையான மீடியா வாய்ஸில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார் நித்யானந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மார்ச் மாத இதழிலும் அவர் பேரானந்தம் அடைவது பற்றி கட்டுரை எழுதியுள்ளார். நித்யானந்தனின் அன்றாட நிகழ்ச்சி நிரலும் அந்தக் கட்டுரையினிடையே பிரசுரமாகியுள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பில் இதையும் குறிப்பிட்ட சரத்குமார், எனக்கு நித்யானந்தனை நல்ல அறிவாளியாகத் தெரியும். அதை நான் மறைக்கவில்லை. அதற்காக என்னையும் குற்றவாளியாக்கி விடுவீர்களா? என்றார்.
அதற்கு நாம், “போலீசார் விசாரணை என்று வரும்போது முதலில் குற்றவாளிக்கு தெரிந்தவர்களிடம் எப்படி விசாரணை மேற்கொள்வார்களோ, அப்படி உங்களிடமும் மேற்கொள்ளலாம். சாமியைரை நன்கு தெரிந்தவர் என்ற முறையில் நீங்களும் பதில் சொல்ல வேண்டி வரலாம். அதற்கு சட்டம் அனுமதிக்கிறதே!” என்று நாம் பதில் சொன்னபோது, சரத் “இல்லையில்ல… நான் அடுத்த இதழிலிருந்து அவர் கட்டுரையை பிரசுரிப்பதாக இல்லை. ஒரு விளக்கமும் தரவிருக்கிறேன்’ என்றார் சரத்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தென்காசியில் சரத் குமார், சினேகா ‘விடியல்’!
» விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் சரத் குமார்!
» ரஜினியுடன் சேர்ந்து நடிக்க போறேன்- சரத் குமார்!
» அடி மேல் அடி; விரக்தியில் எல்ரெட் குமார்!
» நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum