விளக்கு பூஜை செய்வோருக்குச் சில குறிப்புகள்
Page 1 of 1
விளக்கு பூஜை செய்வோருக்குச் சில குறிப்புகள்
இரு விளக்கை வைத்து வணங்கக்கூடாது. ஒன்று அல்லது மூன்று விளக்குகளை வைத்தே வணங்க வேண்டும். காலையில் லட்சுமிக்கு விளக்கேற்றி வணங்கினால் செல்வம் பெருகும். காலையிலும், மாலையிலும் குறித்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கி வந்தால் செல்வம் பெருகும், பாவம் விலகும். விளக்கைக் கிழக்குத் திசை நோக்கி வைப்பது சிறப்பு.
திருவிளக்குப் பூஜையில் விளக்கிற்கு அர்ச்சித்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தலை உச்சி கிட்டிலும் வைத்துவர அவர் தம் கணவர் நலமுடன் வாழ்வர். பூஜை செய்யும்போது விளக்கைத் தலைவாழை மீது வைத்து பூஜை செய்வது சிறப்பு. விளக்கின் சுடர் நின்று நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக்கூடாது. மெல்லத் தணிந்து அடங்கக்கூடாது.
மிகச்சிறியதாக அல்லது மிகப்பெரியதாக சுடர் எரியாமல் விளக்கின் அமைப்பிற்கும் அளவிற்கும் தக்கபடி எரிய வேண்டும். சுடரில் புகை தோன்றினாலும், திரி கருகினாலும் அதற்குக் காரணமான எண்ணெயையோ, திரியையோ உடனே மாற்ற வேண்டும். விளக்கில் குளம்போல எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
விளக்கின் சுடரில் மகாலட்சுமி நிறைந்து நிலைத்து நிற்கின்ற காரணத்தால் அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிரச் செய்வது பெரிய குற்றம். பூக்களால் அணைத்துக் குளிர வைக்கலாம். திரியை உள்ளே இழுத்து ஒளியை எண்ணெயில் மறையச் செய்யலாம்.
அதிகாலை எழுந்ததும் பூஜை அறையில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். தீபம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். அது மங்கலச் சின்னம். இல்லறம் பிரகாசமாக இருக்க எப்போதும் தீபமும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். தீபம் வைத்தவுடன் உடனே முகம் கழுவுதல், கறிகாய் நறுக்குதல், அரிசி களைதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» விளக்கு பூஜை
» விளக்கு பூஜை
» அய்யப்பன் விளக்கு பூஜை ஸ்லோகம்
» நோய்களை விரட்டும் விளக்கு பூஜை
» வாழ்வின் ஒளி கூட்டும் விளக்கு பூஜை
» விளக்கு பூஜை
» அய்யப்பன் விளக்கு பூஜை ஸ்லோகம்
» நோய்களை விரட்டும் விளக்கு பூஜை
» வாழ்வின் ஒளி கூட்டும் விளக்கு பூஜை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum