வாழ்வின் ஒளி கூட்டும் விளக்கு பூஜை
Page 1 of 1
வாழ்வின் ஒளி கூட்டும் விளக்கு பூஜை
சென்னை-சிந்தாதிரிப்பேட்டை
இந்துக்களின் வாழ்வில் காசி, ராமேஸ்வரம் போல் இடம் பிடித்துவிட்ட புண்ணிய பூமி சபரிமலை. புனிதமான பதினெட்டுப் படிகள், இடைவிடாத சரண கோஷம், சுற்றிலும் அடர்ந்த காடுகள், வானளாவிய மரங்கள், புலிகளும் யானைகளும் நீர் அருந்தும் பம்பா பிரதேசம். சிரித்த முகத்துடன் யோக பீடத்தில் காட்சிதரும் ஐயப்பன். இவரது திருக்கோலம் ஒரு யோகாசன முறை. குதிகால்களின் மீது உடலின் அடிபாகத்தை அழுத்தி, உட்பு றம் அமுங்கிய வயிற்றுடன் குதிகால்கள் சற்றே தூக்கியும் முன்புறம் லேசாக சாய்ந்தது போன்றதுமான நிலை. இந்த யோக முறையில் அமரும்போது உடல் வில்போல் ஆகும் தன்மை உண்டாகிறது. மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியினை மேல் நோக்கி எழுப்ப உதவக்கூடியதான யோகமுறை இது.
அறிவின் அடையாளமாக சின்முத்திரையை ஐயப்பனின் வலக்கரம் காட்டுகிறது. பெருவிரலும் சுட்டுவிரலும் சேர்ந்திருப்பதான இம்முத்திரை, ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியத்தைக் குறிக்கின்றது. இடக்கரமானது ‘என் பாதாரவிந்தங்களைச் சரணடைந்தோர் உயர்வானதோர் நிலையை அடைவர்’ என்பதை கூறும் விதமாக ஐயன் தன் திருவடிகளை சுட்டிக் காட்டுவதுபோல் அமைந்துள்ளது. ஹரி, ஹரன் ஐக்கியத்தில் பிறந்த ஹரிஹரசுதனின் கால்களை இணைக்கும் பட்டை, சிவ-விஷ்ணு ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது. இப்படி யோகாசன பீடத்தில் அமர்ந்திருக்கும் ஐயப்ப சுவாமியின் திருவருள் துணைகொண்டு சிந்தாதிரிப்பேட்டையில் திருவிளக்கு பூஜை ஒன்று ஏற்பாடாகியுள்ளது.
இந்நிகழ்ச்சி இவ்வாறு நடைபெறுவது இது இரண்டாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அமைந்திருக்கும் முருகவேள் திருக்கோயிலில், ஐயப்ப சுவாமி சந்நதியில் நடைபெறவிருக்கும் இந்த திருவிளக்கு பூஜையை ஏற்பாடு செய்திருப்பவர்கள், ஸ்ரீ சபரி சாஸ்தா சேவா சங்கத்தினர். நிகழும் டிசம்பர் மாதம் 7 (வெள்ளி), 8(சனி), 9(ஞாயிறு) தேதிகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்ற
ஆண்டைப் போலவே கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்களில் கணபதி ஹோமத்திலிருந்து ஆரம்பித்து, அன்னதானம், கூட்டு பஜனை, தீபாராதனை, அம்பல பிரதிஷ்டை, வாணவேடிக்கை, ஐயப்ப சுவாமி வீதி உலா, இறை இசை நிகழ்ச்சிகள், இரட்டை தாயம்பகா, உடுக்கை பாட்டு, மாளிகைபுரத்து அம்மன் அழைப்பு என்று அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
ஸ்ரீ சபரி சாஸ்தா சேவா சங்கத்தினரின் பெரு முயற்சியுடனும், ஆலய நிர்வாகத்தினரின் பேராதரவுடனும் முருகவேள் திருக்கோயிலில் அழகிய கலை நயத்துடன் கூடிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது, இறைச் சேவையில் சங்கத்தினரின் பங்களிப்பை பளபளவென்று பறைசாற்றுகிறது.
விளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்கள், அன்றைய தினம் தூய்மையாக விரதம் மேற்கொண்டு, ஐயப்ப சுவாமியை உளமாற பிரார்த்தனை செய்து, உள்ளங்கையில் தீபம் ஏந்தி, வீதி வலம் வந்து, அம்பலத்தில் எழுந்தருளும் ஐயப்ப சுவாமியை வணங்கினால், வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9444339181 மற்றும் 9840059454 ஆகிய தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விளக்கு பூஜை
» விளக்கு பூஜை
» நோய்களை விரட்டும் விளக்கு பூஜை
» அய்யப்பன் விளக்கு பூஜை ஸ்லோகம்
» விளக்கு பூஜை செய்வோருக்குச் சில குறிப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum