ராவணன் தமிழ்ப் படத்தில் நடிக்காதது ஏன்? – அபிஷேக் விளக்கம்
Page 1 of 1

தனக்கு தமிழ் தெரியாததால்தான் மணிரத்னம் இயக்கி வரும் ராவணன் படத்தின் தமிழ்ப் பதிப்பில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன்.
ராவண் என்ற பெயரில் மணிரத்தினம் நீண்ட காலமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகனாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி. இப்படத்தை தமிழில் ராவணன் என்ற பெயரில் அவர் வெளியிடவுள்ளார்.
தமிழ்ப் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ருத்விராஜ், பிரியா மணி, கார்த்திக் , ரஞ்சிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் தமிழிலும் அபிஷேக் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் அவர் நடிக்கவில்லை. அந்த வேடத்தில் ப்ருத்விராஜ் நடிக்கிறார்.
அபிஷேக் ஏன் நடிக்கவில்லை என்று அப்போது கூறப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி அபிஷேக் பச்சன் கூறியிருப்பதாவது:
மணிரத்தினம் ராவண் படத்தை இயக்க முடிவு செய்தபோது இந்தியில் மட்டுமே இயக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் தமிழிலும் இதைக் கொண்டுவர தீர்மைனித்தார். இந்தியில் நான் நடித்த பீரா கதாபாத்திரத்தை தமிழில் தேவ் என்ற பெயரில் செய்ய கேட்டுக் கொண்டார். நானும் ஏற்றுக் கொண்டேன்.
ஒத்துக் கொண்டாலும் கூட என்னால் தமிழில் அதைச் செய்ய முடியாது என்று இப்போது தோன்றியது. காரணம் எனக்கு தமிழ் தெரியாது. தெரியாத ஒரு மொழியில் நடிப்பது என்பது சரியாக இருக்காது.
எனவே தமிழில் நடிக்க விரும்பவில்லை என்று மணிரத்தினத்திடம் கூறிவிட்டேன். ஒரு நடிகருக்கு நடிக்கும் படத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
அதேசமயம், ஐஸ்வர்யா ராய் இரு மொழிகளிலும் நடிக்கிறார். அவருக்கு தமிழ் தெரியும் என்பதால் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார் அபிஷேக்.
அபிஷேக் மறுத்ததால்தான் பிருத்விராஜை நடிக்க வைத்தாராம் மணிரத்னம்.
இப்போது வேகமாக தமிழ் மொழியைக் கற்று வருகிறார் அபிஷேக் பச்சன் என்பது கூடுதல் தகவல்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? – தமன்னா
» ரஜினியுடன் நடிக்காதது ஏன்? – கத்ரீனா விளக்கம்
» பாரதிராஜா படத்தில் நடிக்காதது ஏன்? – பார்த்தீபன்
» மலையாள படத்தில் நடிக்காதது ஏன்? மீனா
» ராமாயணக் கதையா ராவணன்? – விக்ரம் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum