சிவாலய தரிசன விதிகள்
Page 1 of 1
சிவாலய தரிசன விதிகள்
* தினமும் கோவிலுக்கு சென்று சிரத்தையோடு சிவதரிசனம் செய்து வரவேண்டும்.
* சிவாலயத்துக்கு அருகில் உள்ள சிவதீர்த்தத்தில் நீராடி, உலர்ந்த துண்டினால் உடம்பை துடைத்துக் கொண்டு ஈர உடை களைந்து மாற்று உடை அணியவும். அனுட்டானம், ஜெபம் முடித்து கோவிலுக்குள் செல்லவும்.
* சிவனை வணங்க போகிறவர்கள் வெறுங்கையுடன் போகக் கூடாது. வசதிப்பட்டால் தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை கொண்டு போகலாம். இயலாதவர்கள் பூ கொடுத்து வணங்க வேண்டும்.
* கோவிலை நெருங்கியவுடனே தூபலிங்கமாகிய கோபுரத்தை வணங்கி, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்துக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும். பலிபீடத்துக்கு முன்னாகவே வணங்க வேண்டும்.
* ஆண்கள் சாஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். தலை, இரு கைகள், இரண்டு செவிகள், மோவாய், தோள் இரண்டு என்று எட்டு உறுப்புகளும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவது அஷ்டாங்க நமஸ்காரம். தலை, இரண்டு கைகள், முழந்தாளிரண்டும் நிலத்தில் தோயும்பட வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம்.
* நமஸ்காரத்தை மூன்று தடவை, ஐந்து தடவை, ஒன்பது தடவை அல்லது பன்னிரண்டு தடவையும் செய்யலாம். இரண்டு தரம் மட்டும் செய்வது கூடாது.
* நமஸ்காரம் செய்யும் போது மேற்கிலோ, தெற்கிலோ கால் நீட்ட வேண்டும். கிழக்குப் பக்கமோ, வடக்குப் பக்கமோ கால் நீட்டக்கூடாது.
* நமஸ்கரித்து எழுந்தவர் சிவபெருமானை சிறிதும் மறவாத சிந்தையோடு ஜபித்தபடி அல்லது இரு கைகளையும் இருதயத்திலே குவித்துக் கொண்ட படி மெல்ல கால் வைத்து பிரதட்சணம் பண்ணவும்.
* சிவபெருமானை மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும், பதினைந்து அல்லது இருபது தரமாயினும் பிரதட்சணம் பண்ண வேண்டும்.
* அபிஷேக காலத்தில் உட்பிரகாரத்தில் பிரதட்சணமோ, நமஸ்காரமோ செய்யக் கூடாது.
* முதலில் விநாயகர் சந்நிதி சென்று வணங்க வேண்டும்.
* பின்பு இரு கைகளையும் தலையிலே குவித்துக் கொண்டு சிவன் சந்நிதியை அடைந்து அவரை தரிசிக்க வேண்டும்.
* தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம், திருவருட்பா பாடினால் நல்லது.
* வில்வ அர்ச்சனை, நிவேதனம், கற்பூர ஆரத்தி, செய்தல் வேண்டும்.
* சிவன் சந்நிதியில் இருந்து திரும்பும் போது சிவபெருமானுக்கும், இடபதேவருக்கும் முதுகை காட்டாது திரும்புதல் வேண்டும்.
* சோமவாரம், அஷ்டமி, பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, திருவாதிரை, உத்தராயணம், தட்சிணாயணம், சித்திரை விஷு, ஐப்பசி விஷு, மாதப் பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், சிவராத்திரி முதலிய புண்ணிய காலங்களில் சிவதரிசனம் செய்பவர்கள் மோட்சம் அடைவார்கள்.
* தீவினைகள் நீங்கி, முக்தி பெற அங்கப் பிரதட்சணம் செய்யவும், அங்கப்பிரதட்சணம் செய்கிறவர் மனதில் சிவபெருமானை தியானித்து, நமச்சிவாய எனும் பஞ்சாட்சரத்தை நாவினால் உச்சரித்தபடி செய்யவும்.
* பிரதோஷ காலத்தில் மெய்யன்போடு சிவதரிசனம் செய்கிறவர்கள் கடன், வறுமை, நோய் பயம், கவலை நீங்கப் பெறுவர்கள்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» சிவாலய தரிசன முறை
» பக்தர்கள் ஓடிச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம்
» பக்தர்கள் ஓடிச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம்
» சிவாலய தரிசனம்
» சிவாலய தரிசனம்
» பக்தர்கள் ஓடிச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம்
» பக்தர்கள் ஓடிச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம்
» சிவாலய தரிசனம்
» சிவாலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum