கொழும்பு விழா: பங்கேற்கும் நடிகர்கள் படங்களுக்கு தென் இந்தியாவில் தடை!
Page 1 of 1

கொழும்பு விழாவில் இந்திய திரை நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது. மீறி பங்கேற்போர் படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது, என தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு நிர்வாகிகள் அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும், சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் இது தொடர்பாக இந்த விழாவை நடத்தும் முக்கிய அமைப்பான இந்திய ஐ.ஐ.எப்.ஏ. நிர்வாகிகளைச் சந்தித்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாகவும் தென்னிந்திய திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
வரும் ஜூன் 4,5,6 ஆகிய தேதிகளில் இலங்கையில் இந்திய ஐ.ஐ.எப்.ஏ. அமைப்பு சார்பி்ல் சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இதில் இந்திய திரை நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழ்த் திரை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து இந்த விழாவின் சிறப்புத் தூதர் பதவியிலிருந்து அமிதாப் விலகினார். ஆனால் ஷாருக், சல்மான் கான் உள்ளிட்ட இந்தி நடிகர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
இந் நிலையில் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட திரை அமைப்புகள் கலந்து கொண்ட கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்னிந்திய மொழி படங்களின் படப்பிடிப்புகள், கலை விழாக்கள் எதையும் இலங்கையில் நடத்தக் கூடாது. சர்வதேச திரைப்பட விழாவுக்கு தென்னிந்திய திரைப்படத் துறையினர் ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களின் படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது.
இலங்கையில் விழாவை நடத்தாமல் வேறு எந்த நாட்டிலாவது விழா நடந்தால் தென்னிந்திய சினிமா உலகம் சர்வதேச திரைப்பட விழாவை வரவேற்கும்.
இவ்விழாவை நடத்தக் கூடாதென சர்வதேச இந்திய திரைப்பட அகாதெமி (ஐ.ஐ.எப்.ஏ.) குழுவினரை மும்பை சென்று சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன், நடிகர் சங்கம் சார்பில் ராதாரவி, பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரைக் கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து திரை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொழும்பு இந்திப் பட விழா-அனைத்து சூப்பர் ஸ்டார்களும் புறக்கணிப்பு
» ‘தென் இந்திய சரக்கு கப்பல்களை புறக்கணிப்போம்’ கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் மிரட்டல்
» ஐஃபா விழாவில் பங்கேற்கும் நடிகர் – நடிகைகள் விவரம்
» சூர்யா, ஜெயம்ரவி, ஸ்ரீகாந்த் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு திரிஷா தூதுவர்?
» கொழும்பு பட விழா அழைப்பு – ஷாக் ஆன ரஜினி – கொந்தளித்த கமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum