பெண் சிங்கம்… ரஜினி பார்த்தார்!
Page 1 of 1
பெண் சிங்கம்… ரஜினி பார்த்தார்!
முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள பெண் சிங்கம் படத்தை நேற்று பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதுவரை இல்லாத அளவு அக்கறையுடனும் அசத்தல் விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது முதல்வர் கருணாநிதியின் பெண் சிங்கம் படத்துக்காக.
பாலி ஸ்ரீ ரங்கம் இயக்கியுள்ள இந்தப் படம் உண்மையிலேயே நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, முதல்வர் வசனம் எழுதிய படம் என்பதற்காக சில விநியோகஸ்தர்கள் வாங்குவதுண்டு. ஆனால் இந்தப் படம் உண்மையிலே நன்றாக வந்துள்ளது. எனவே அனைத்து ஏரியாக்களும் விற்றுள்ளதாக, திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் பிரிவியூ காட்சியை முதல்வர் கருணாநிதி நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் திரையரங்கில் பார்த்தார்.
இந்தப் படத்தை தன்னுடன் பார்க்க வருமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் முதல்வர்.
முதல்வருடன் அமர்ந்து நேற்று மாலை பெண் சிங்கம் பார்த்த ரஜினி, படம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கலைஞரின் பேனாவில் பிறந்த எழுத்துக்களைத் திரையில் பார்க்கிறேன். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருந்தது பெண் சிங்கம்.
ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமான திரைக்கதை இது. ஜனரஞ்சமாக சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் ஜெயிக்கும். இயக்குநருக்கும் குழுவினருக்கும் பாராட்டுக்கள்” என்றார்.
துணை முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், ஜேகே ரித்தீஷ் எம்பி உள்ளிட்டோரும் படம் பார்த்தனர்.
இயக்குநர் பாலி ஸ்ரீரங்கம் அனைவரையும் வரவேற்றார். ரஜினியின் பாராட்டு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பேரன்களைப் பார்த்தார் ரஜினி!
» "மறந்தேன் மன்னித்தேன்" பார்த்தார் ரஜினி
» இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தார்: ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி
» “மன்மதன் அம்பு” படம் பார்த்தார்: கமலஹாசனுக்கு ரஜினி பாராட்டு “அபாரமாக நடித்துள்ளார்”
» பெண் சிங்கம்: மீண்டும் இணைந்த வாலி – வைரமுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum