தமிழர்களின் வயிறுகளை எரிய வைக்கிறது இந்திய அரசு – ராஜேந்தர் ஆவேசம்
Page 1 of 1
தமிழர்களின் வயிறுகளை எரிய வைக்கிறது இந்திய அரசு – ராஜேந்தர் ஆவேசம்
லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து வரவேற்பதன் மூலம் தமிழர்களின் வயிறுகளை எரிய வைக்கிறது இந்திய அரசு என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடுமைக்குச் சொந்தக்காரர் உலக நாடுகளின் நீதிமன்றக் குற்றக் கூண்டிலே நிறுத்தப்பட வேண்டிய கொடுங்கோலர் ராஜபக்சே தமிழினத்தையும், மனித நேயத்தையும் ஒன்று சேர்த்து மண்ணைத் தோண்டிப் புதைத்த மாபாதகர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அரசுக்குக் கேட்கவில்லை கூவிக்கூவி அழும் இலங்கைத் தமிழர்களின் அழுகை. அதனால் தானோ ராஜபக்சே டெல்லிக்கு புரியப் போகிறார் வருகை.
மத்திய அரசு ராஜபக்சேவுக்கு விரிக்க நினைக்கிறது ரத்தினக் கம்பளம்.
இந்தச் செயல் 6 1/2 கோடி தமிழர்களையும் அவமானப்படுத்தும் அவலம்.
மத்திய அரசின் இந்த அணுகுமுறை தமிழர்களின் உள்ளத்தையும் உணர்வையும் நோகடிக்கின்றது. ஒப்புக்காகக் கூட ராஜபக்சேவை மத்திய அரசு வரவேற்கக் கூடாதென தமிழக அரசு சார்பில் வைக்கப்படவில்லை கோரிக்கை. தமிழர்களின் உணர்வு ஆகலாமா வற்றிப்போகும் வைகை.
தமிழர்களின் வயிற்றை எரிய வைக்கிறது இந்திய அரசின் செய்கை. இப்படிப்பட்ட இந்தச் செயலை லட்சிய தி.மு.க.வின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கண்டனமும் தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒஸ்தியை நானே ரிலீஸ் செய்வேன் – டி.ராஜேந்தர் ஆவேசம்
» ஷாருக்கானுக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்: பாகிஸ்தான் மந்திரி சொல்கிறார்
» ஷாருக்கானுக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்: பாகிஸ்தான் மந்திரி சொல்கிறார்
» கறுப்புப் பண மீட்பில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை!- ருடால்ப் எல்மர்
» ரசிகர்களின் அன்பு நெகிழ வைக்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum