தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர்களின் அன்பு நெகிழ வைக்கிறது

Go down

ரசிகர்களின் அன்பு நெகிழ வைக்கிறது Empty ரசிகர்களின் அன்பு நெகிழ வைக்கிறது

Post  ishwarya Fri Mar 22, 2013 5:32 pm



ரசிகர்களின் அன்பு தன்னை நெகிழ வைப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

பல்வேறு சிக்கல்களுக்கு பின்பு விஸ்வரூபம் வெளியானாலும் அதற்கு ரசிகர்கள் தந்த வரவேற்பு எதிர்பாராதது. அந்த அன்பு என்னை நெகிழ வைக்கிறது. ரசிகர்களின் இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

எஞ்சியிருக்கும் இந்த வாழ்நாள்களில் அதை செய்ய முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. என் நஷ்டத்தை ஈடுகட்ட பல ரசிகர்கள் தங்கள் வீட்டுப் பத்திரங்கள், வீட்டு சாவிகள், காசோலைகள் போன்றவற்றை அனுப்பியிருந்தார்கள். அந்த அன்பு அளவிட முடியாதது. இப்போது என்னை வேறு கடன் சூழ்ந்திருக்கிறது. படத்துக்கான சக கலைஞர்களின் பாராட்டு புது உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

தமிழகம், புதுவை மற்றும் வெளிநாடுகளில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வரூபம் படப் பிரச்னையில் தீர்வு காண வழி வகுத்த தமிழக முதல்வருக்கும், அதற்கு துணையாக இருந்த ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும், விஸ்வரூபத்தை பார்க்க அழைப்பு விடுத்தும் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். திரைப்படங்களை பார்ப்பதில்லை என்று முதல்வர் சமீபத்தில் சொல்லியிருந்தார். அந்த உறுதியைக் கைவிட்டு என் படத்தை பார்ப்பார் என நம்புகிறேன். விஸ்வரூபம் படப் பிரச்னை போன்று என் இன்னொரு படத்துக்கு பிரச்னை ஏற்பட்டால் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து முடிவெடுப்பேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகள்
» ஓடாத படத்தையும் ஓட வைக்கும் சன் பிக்சர்ஸ் வேட்டைக்காரனையும் ஓட வைக்கிறது.
» ரசிகர்களின் அன்பில் பெருமிதம் அடைகிறேன்: ரஜினிகாந்த்
» தமிழர்களின் வயிறுகளை எரிய வைக்கிறது இந்திய அரசு – ராஜேந்தர் ஆவேசம்
» நாடகம் படம்மூலம் 17வது ஆண்டில் பெரிய திரையிலும் அடியெடுத்து வைக்கிறது அபிநயா கிரியேஷன்ஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum