தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்?

Go down

போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? Empty போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்?

Post  ishwarya Thu Apr 25, 2013 1:44 pm



நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், மும்பை டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவுக்கும் ஆகஸ்ட் 24ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக காதல் நிலவுகிறது. இதன் காரணமாக பிரகாஷ் ராஜுக்கும், அவரது மனைவி லலிதா குமாரிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் இருவரும் பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் போனியை மணக்க பிரகாஷ் ராஜ் முடிவெடுத்துள்ளார். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக பிரகாஷ் ராஜ் அறிவிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

ஆகஸ்ட் 24ம் தேதி மும்பையில் வைத்து கல்யாணம் நடக்கவுள்ளதாம். திரையுலக பிரபலங்களை திருமணத்திற்கு அழைக்க பிரகாஷ் ராஜ் திட்டமிட்டுள்ளாராம்.

1994ம் ஆண்டு லலிதா குமாரியை மணந்தார் பிரகாஷ் ராஜ். அவர்களுக்கு 3 குழந்தைகள். ஒரு குழந்தை இறந்து விட்டது.

பிரகாஷ் ராஜின் திருமண ஏற்பாடுகளை நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் கவனித்து வருகிறாராம். இவர்தான் இந்தியில் வெளியான வான்டட் படம் மூலம் பிரகாஷ் ராஜை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் என்பது நினைவிருக்கலாம்.

திருமணத்திற்கு வான்டட் பட நாயகன் சல்மான் கான், நடிகர் அக்ஷய் குமார், இயக்குநர் பிரியதர்ஷன் போன்றோர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த திருமண செய்தியை பிரகாஷ் ராஜோ அல்லது போனி வர்மாவோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum