நானும் ஒரு ஷங்கர், மணிரத்னம்தான்! டைரக்டர் அனிஷ்
Page 1 of 1

இருபத்தி மூன்று வயதிலேயே அட்டூழியம், அடங்காமை என சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் சாட்டையடி குறும்படங்களை இயக்கிய அனுபவத்துடன் ஆதிக்கம் என்ற சினிமாவை இயக்கிக் கொண்டிருக்கிறார் டைரக்டர் அனிஷ்.
ரவுடியிச கதை படங்களில் எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்பாவிகள் வன்முறையை கையில் எடுப்பதுபோலதான் காலம் காலமாக தமிழ் சினிமாவில் காட்டி வருகிறார்கள்
ஆனால் ஆதிக்கம் படத்தில் ரவுடிகள் இஷ்டப்பட்டுத்தான் வன்முறையை தேர்வு செய்கிறார்கள் என்பதை உணர்த்தப் போவதாக கூறும் அனிஷ், படம் திரைக்கு வரும்போது எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒத்திகை சூட்டிங்கையும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நம்பரில் பூஜை போடப்பட்டு, இன்று வரை 25 சதவீத சூட்டிங்கையும், 100 சதவீத ஒத்திகை சூட்டிங்கையும் நடத்தி முடித்திருக்கும் அனிஷ், தனது பாப்புலிஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மூலம்தான் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதுவரை எந்த டைரக்டரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக படத்தை இயக்கி வரும் இவரிடம், ஆதிக்கம் படம் தாமதம் ஏன்? என்று கேட்டால், நம்பிக்கையுடன் கூடிய வார்த்தைகளை உதிர்க்கிறார். சினிமா எடுப்பது என்பது சாதாரண விஷயம்தான். எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படம் எடுக்க வேண்டும். காதல் காட்சிகளை மட்டுமே வைத்தால் இளைஞர்களுக்கு, பெரியவர்களுக்கும் மட்டும்தான் பிடிக்கும். கலவரக் காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் வைத்தால் இளைஞர்களுக்கு பிடிக்கும், காமெடி காட்சிகளை வைத்தால் சிறுவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல மெசேஜூடன், நல்ல கதை, காட்சியமைப்புடன் படம் எடுத்தால் எல்லா தரப்பினருக்கும் பிடிக்கும். சும்மா வந்தோம்… படம் எடுத்தோம்னு இருக்கக் கூடாது. எல்லோராலும் பேசப்படணும்.
ரசிகர்களுக்கு நல்ல அவுட்புட் கொடுக்கணும்னா ஒரு வருஷம் இல்ல மூணு வருஷத்துக்கு ஒரு படம் கூட கொடுப்பேன். எனது முதல் படைப்பு எல்லா தரப்பினரையும் கவரும் வகையில், எல்லா தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இன்று பிரபல இயக்குனர்களாக இருக்கும் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்டோர் கூட ஒரு படம் இயக்க 2 ஆண்டு வரை எடுத்துக் கொள்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை நானும் ஒரு ஷங்கர், ஒரு மணிரத்னம்தான். எனது படைப்பு வெளிவரும்போது கண்டிப்பாக மக்களிடையே பேசப்படும். நிழல்உலக தாதாக்களின் நிஜக்கதை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும், என்கிறார் தன்னம்பிக்கையுடன்!
அனிஷின் தந்தை ஆர்.பத்மநாபன் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாவிடம் சிறுவயதிலேயே கற்றுக் கொண்ட சினிமா பாடத்தைத்தான் இப்போது படமாக உருவாகி வருகிறது!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ''நானும், சத்யராஜும் கணவன்-மனைவி மாதிரி'' டைரக்டர் மணிவண்ணன் தமாஷ்
» நானும் இலக்கியமும்
» நானும் விருது நடிகையாகப்போகிறேன்- அமலாபால்
» பாஷாவும் நானும்
» கடவுளும் நானும்
» நானும் இலக்கியமும்
» நானும் விருது நடிகையாகப்போகிறேன்- அமலாபால்
» பாஷாவும் நானும்
» கடவுளும் நானும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum