ஆசின் குறித்து முடிவெடுக்க அனைத்து அமைப்புகளும் கூடி ஆலோசனை – ராம நாராயணன்
Page 1 of 1

நடிகை ஆசின் இலங்கை சென்றது பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதால் இதுகுறித்து திரையுலகின் அனைத்து அமைப்புகளையும் கூட்டி விரைவில் ஆலோசிப்போம் என்று தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் ராம நாராயணன் கூறியுள்ளார்.
ஆசின் விவகாரம் குறித்து தமிழ் திரைத்துறையினர் மாறி மாறி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பல விஷயங்களில் படார் படாரென்று முடிவெடுத்து அறிவிக்கும் வழக்கம் கொண்ட திரைத்துறையினர் ஆசின் விவகாரத்தில் மட்டும் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தடாலடியாக முடிவெடுத்து அறிவித்து, அதை எதிர்த்து ஆசின் சட்ட ரீதியாக போய் விட்டால் சிக்கலாகி விடுமோ என திரைத் துறையினர் பயப்படுவதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஆசின் விவகாரம் குறித்துதிரையுலகின் அனைத்து அமைப்புகளையும் கூட்டி ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாக ராம நாராயணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
அசின் விவகாரம் பெரிய சர்ச்சையாகி இருப்பதால் அதனை பிலிம்சேம்பர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இந்த பிரச்சினை பற்றி ஆலோசித்து முடிவெடுக்க ஒரு வாரத்தில் திரைப்பட கூட்டுக்குழுவை கூட்டும்படி பிலிம்சேம்பர் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இக்கூட்டுக்குழு கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி, விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட சங்கங்களின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். கூட்டுக் குழுவில் அசின் பிரச்சினை சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும் என்றார் ராம நாராயணன்.
ஒரு பத்திரிக்கையில் நடிகைகள் குறித்து செய்தி வந்து விட்டது என்பதற்காக அதிரடியாக கூட்டத்தைக் கூட்டி சரமாரியாக ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களையும் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்த திரையுலகினர், இப்போது நடிகை ஆசின் இலங்கைக்குப் போனதை பல்வேறு தமிழ் அமைப்புகள், உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் படு நிதானமாக அணுகி வருவது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்னைப் பற்றிய வதந்திகள் குறித்து கவலையே இல்லை – ஆசின்
» ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடிப்பது குறித்து சேரன் ஆலோசனை
» அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகளும் பரிகார விளக்கமும்

» குழந்தைகளைத் தத்தெடுக்கும் முறைகளும் அணுகவேண்டிய அமைப்புகளும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum