தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Go down

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம் Empty 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

Post  ishwarya Wed Apr 24, 2013 12:58 pm

2009ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது (57வது தேசிய விருது) பெறும் படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பட்டியலை விருது குழுத்தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:

சிறந்த படம் : குட்டி ஷ்ரங் (மம்முட்டி நடித்த மலையாள படம்). இந்த படத்தை தயாரித்த ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், படத்தின் டைரக்டர் ஷாஜி என்.கருணுக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் தங்கத்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த நடிகர் : அமிதாப் பச்சன் (பா என்ற இந்திப்படத்துக்காக இந்த விருது வழங்கப்படுகிறது). அமிதாப்புக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த தமிழ்ப்படம் : பசங்க. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமாருக்கும், டைரக்டர் பாண்டிராஜூக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசும் வெள்ளித்தாமரை விருதும் வழங்கப்பட உள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் : ஜீவன், அன்பரசு (இவர்கள் இருவரும் பசங்க படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள்) . இவர்களுக்கு அகில இந்திய அளவில் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான வெள்ளித்தாமரை விருதும், தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த வசனகர்த்தா : டைரக்டர் பாண்டிராஜ் (பசங்க படத்துக்காக வழங்கப்படுகிறது). இவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் பரிசாக கிடைக்கும்.

சிறந்த பொழுதுபோக்கு படம் : 3 இடியட்ஸ். இதன் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் தலா ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த ரீ ரெக்கார்டிங் : 3 இடியட்ஸ்

சிறந்த பாடல் : 3 இடியங்ஸ்

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த படம் : டெல்லி 6. (இப்படத்துக்கு நர்கீஸ் தத் விருது கிடைக்கும்). இதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு தலா ரூ.ஒன்றரை லட்சம ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்பட உள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் : இளையராஜா (பழசிராஜா என்ற மலையாள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவருக்கு ‌ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை வழங்கப்படும்.

சிறப்பு விருது : நடிகை பத்மப்ரியா (இவர் பல படங்களில் சிறப்பா நடித்ததற்காக இந்த விருது பெறுகிறார்). இவருக்கு சிறப்பு விருதுக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தேசிய சிறந்த படம் : வெல்டன் அப்பா – இந்திப்படம் (சமூக பிரச்னைகளை விளக்கும் தேசிய சிறந்த படத்துக்கான விருது இப்படத்திற்கு வழங்கப்படுகிறது) இதன் தயாரிப்பாளர், இயக்குனருக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை வழங்கப்படும்.

சிறந்த குழந்தைகள் படம் : புட்டானி பார்லி (கன்னடப்படம்) இதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.ஒன்றரை லட்சமும், வெள்ளித்தாமரையும் பரிசாக வழங்கப்படும்.

சிறந்த இயக்குனர் : ரீதுபர்னோ கோஷ் (அபோகோமன் என்ற வங்காளப்படத்தை இயக்கியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவருக்கு ரூ.இரண்டரை லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் தங்கத்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த நடிகை : அனன்யா சாட்டர்ஜி (அபோகோமன் என்ற வங்காளப்படம்) இவருக்கு இவருக்கு வெள்ளித் தாமரையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த பின்னணி பாடகர் : இஸ்லாம் (மகாநகர் அட் கொல்கத்தா என்ற வங்காள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது) இவருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த பின்னணி பாடகி : நீலாஞ்சவா சர்க்கார் (ஹவுஸ் புல் என்ற வங்காள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது) இவருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த ஒளிப்பதிவாளர் : ரசூல் பூக்குட்டி (குட்டி ஷரங்க் என்ற மலையாள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவர் ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum