கடவுள் பெயரால் சண்டையிட வேண்டாம்-கமல் கோரிக்கை
Page 1 of 1

கடவுளின் பெயரால் சண்டையிடுவது தேவையற்றது. என்னைப் பொறுத்தவரை கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுளை மட்டும் கண்டால் கல்லே தெரியாது என்பதே என்று கூறினார் கமல்ஹாசன்.
பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு கமல் ஹாசன் சிடியை வெளியிட்டார்.
இயக்குநர் பாலா, கவிஞர் யுகபாரதி ஆகியோர் பேசும்போது கடவுள் குறித்து விவாதித்துக் கொண்டனர். பாலா, கடவுளே கிடையாது என்றார். யுகபாரதி பேசும்போது கர்த்தர்தான் பிரபு சாலமனைக் காப்பார் என்றார்.
பின்னர் மைக் கமலிடம் வந்தது. அவர் பேசுகையில், பிரபு சாலமன் கடவுளை நம்புகிறவர் என்றனர். பாலா அறிவுதான் கடவுள் என்றார். இதெல்லாம் ஒவ்வொருவருடைய நம்பிக்கையை பொருத்தது. கடவுள் பெயரால் சண்டைகள் தேவை இல்லை. என்னை பொருத்தவரை கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லே தெரியாது என்பதுதான்.
காலம் போகிற வேகத்தில் தமிழ் சினிமா திசை மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் மைனா போன்ற படங்களால் நம்பிக்கை ஏற்படுகிறது. இந்த படத்தை பார்த்து இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். எனக்கு சினிமா மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் நன்றாக தூங்கினேன்.
பெரிய படம் சிறிய படம் என்றெல்லாம் எதுவும் இல்லை. ரசிகர்கள் ரசிக்கும் படங்களெல்லாம் பெரிய படங்கள்தான். எது நல்ல படம், எது கெட்ட படம், என்பதை பகுத்திறிந்து அறிவது அவசியம். நல்ல படங்களை காப்பாற்ற வேண்டும். மோசமான படங்களை புறக்கணிப்பதும் நம் கடமை என்றார் கமல்ஹாசன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் – இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை
» வேண்டாம் கமல் படம்.. சின்னப் படமே போதும்! – மிஷ்கின்
» பிரபுதேவா சொத்துக்களை முடக்க ரம்லத் கோரிக்கை!
» தமிழ்ப் படமும் வேண்டாம்… தமிழ் ஹீரோக்களும் வேண்டாம்! – அனுஷ்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum