பிரியாணி கொடுத்து பிச்சைக்காரியை கரெக்ட் பண்றியா? – நடிகரை வளைத்த மக்கள்
Page 1 of 1

அது ஒரு படப்பிடிப்பு. ஹீரோ ரமணா. பிச்சைக்காரி வேடத்தில் துணை நடிகை பேச்சி. காட்சிப்படி, பிச்சைக்காரிக்கு பிரியாணிப் பொட்டலம் தருகிறார் ஹீரோ.
இந்தக் காட்சியை தத்ரூபமாகக் காட்ட, கேமராவை காருக்குள் மறைத்து வைத்து பொது மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் படமாக்கிக் கொண்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரும், மக்களும் திமுதிமுவென கூடினர்.
“என்னய்யா, பிரியாணி கொடுத்து பிச்சைக்காரியை கரெக்ட் பண்றியா” என்று கேட்டபடி அடிக்கப் பாய, சற்று மிரண்ட ரமணா, தனது கெட்டப்பை விலக்கி, “நான் சினிமா ஹீரோ ரமணாங்க. இது ஷூட்டிங்…” என்றார்.
அதை யாரும் நம்பத் தயாராகவே இல்லை. ‘யார்கிட்ட ரீல் விடுறே.. ஷூட்டிங்னா எங்கே கேமிரா? எங்கே ‘ஹீரோயினி’? எங்கே டைரக்டர்… அட பெருசு பெருசா வண்டிங்க நிக்குமே… அதெல்லாம் எங்கய்யா?’ என்று மடக்க, அதுவரை காருக்குள் மறைந்திருந்த டைரக்டரும் மற்றவர்களும் ஓடிவந்து நிலைமையை விளக்கினர்.
அதன்பிறகே கூட்டம் கலைந்து போயிருக்கிறது.
இதுவே எங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றிதானே என்கிறார் புதிய இயக்குநர் சம்பத் ஆறுமுகம். இந்தக் காட்சி எடுக்கப்பட்டது காந்திக் கணக்கு என்ற படத்துக்காக.
நாட்டின் அத்தனை பிரச்சினைகளுக்கும் காந்திய வழியிலான தீர்வு என்ன என்பதே படத்தின் மையக் கரு. முன்னா பாய் ஸ்டைலா என்றால், இல்லை இது நம்ம ஸ்டைலு என்கிறார் மகா தன்னம்பிக்கையுடன்.
அவர் கூறுகையில், “மூக்கு கண்ணாடி, கைத்தடி, கதர் ஆடை என காந்தியை தெரியும். பாரிஸ்டர் பட்டம் வாங்கி, கோட்டு சூட்டு போட்ட மிடுக்கான வழக்கறிஞர் காந்தியை பெரும்பாலும் தெரியாது. இந்த பாத்திரப் படைப்பில் உருவானதே காந்தி கணக்கு ஹீரோ ரமணாவின் கேரக்டர்.
நம் நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் பிரச்னையை சொல்லி, அதற்கு சரியான தீர்வும் கூறி, ‘இதுதான் காந்தி கணக்கு’ என்று சொல்வதே கதை.
எம்.பி.ஏ மாணவன், சமூக மாற்றத்துக்கு எப்படி உதவுகிறான் என்பது மையக்கரு. ஹீரோ, ஹீரோயின் தவிர படத்தின் முதல்பாதியில் வரும் கேரக்டர்கள், அடுத்த பாதியில் வராத அளவுக்கு திரைக்கதை இருக்கும். வில்லனே இல்லாத படம் இது. நாடு மாற வேண்டுமானால், வீடு மாற வேண்டும். எந்த மாற்றமும், சேவையும் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்கிறோம்…” என்றார்.
பூஜா பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் நாயகனாக ரமணாவும், நாயகியாக மும்பையைச் சேர்ந்த ரிச்சா சின்ஹாவும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் படம் வெளிவரவிருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொடுத்து கொடுத்து கருத்த கரங்கள்
» ‘கரெக்ட் பண்ண கமல்’! – புல்லரிக்கும் த்ரிஷா
» விஸ்வரூபத்தை வளைத்த விஜய்?
» விஸ்வரூபத்தை வளைத்த விஜய்?
» அக்கா, தங்கையை வளைத்த ஜீவா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum