தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எந்திரன் ரிலீஸ் – தியேட்டர்களில் விழாக்கோலம்

Go down

எந்திரன் ரிலீஸ் – தியேட்டர்களில் விழாக்கோலம் Empty எந்திரன் ரிலீஸ் – தியேட்டர்களில் விழாக்கோலம்

Post  ishwarya Wed Apr 24, 2013 11:36 am

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிக்க, ஷங்கர் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க உருவாகியுள்ள எந்திரன் தமிழகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து எந்திரன் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக எந்திரனுக்காக காத்திருந்த ரசிகர்களின் காத்திருப்பு இன்றோடு முடிந்தது. ரூ. 125 கோடியில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள எந்திரன் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை திரையிட்டுள்ளனர்.

தமிழகத்தில், சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 50 தியேட்டர்களில் எந்திரன் இன்று ரிலீஸாகியுள்ளது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 காட்சிகளை போடவுள்ளனர். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 தியேட்டர்களில் எந்திரனை திரையிடுகின்றனர்.

எந்திரன் திரைக்கு வந்ததை ரஜினி ரசிகர்கள் பெரும் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் திருவிழாக் கோலமாக காணப்படுகிறது. விதம் விதமான முறையில் படத்தை வரவேற்று அவர்கள் செய்துள்ள ஏற்பாடுகள் படு தடபுடலாக உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  தீபாவளிக்கு ‘எந்திரன்’: 3000 தியேட்டர்களில் ரிலீஸ்!
» கேரளாவில் 125 தியேட்டர்களில் எந்திரன் டிக்கெட் காலி: புதிய சாதனை
» 600 தியேட்டர்களில் சுறா ரிலீஸ்!!
» பெங்களூர் – எந்திரன் ஓடும் தியேட்டர்களில் ‘ஓவர்’ வசூல்-அதிகாரிகள் அதிரடி ரெய்ட்!
» எம்.ஜி.ஆர். படங்கள் மீண்டும் ரிலீஸ்: தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum