தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித் ஹோட்டல் திறக்கலாம்! த்ரிஷா அட்வைஸ்!!

Go down

அஜித் ஹோட்டல் திறக்கலாம்! த்ரிஷா அட்வைஸ்!! Empty அஜித் ஹோட்டல் திறக்கலாம்! த்ரிஷா அட்வைஸ்!!

Post  ishwarya Tue Apr 23, 2013 2:21 pm

சிறந்த சமையல் கலைஞராக இருக்கும் அஜித் சொந்தமாக ஹோட்டல் தொடங்கலாம் என்று நடிகை த்ரிஷா அட்வைஸ் கூறியிருக்கிறார். அஜித் தற்போது நடித்து வரும் புதிய படம் மங்காத்தா.

படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மங்காத்தா சூட்டிங் இடைவெளியில் படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து கொடுத்து அசத்திய செய்தி ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் அஜித்தின் பிரியாணி குறித்து த்ரிஷா கூறுகையில், அஜித் சூட்டிங்கின்போது தானே தனது கையால் தயாரித்த பிரியாணியைக் கொடுத்து அனைவரையும் அசத்தி விட்டார்.

உண்மையிலேயே அஜீத் மிகப் பெரிய சமையல்நிபுணர். அட்டகாசமான பிரியாணி அது. பேசாமல் உடனே ஒரு ரெஸ்டாரென்ட்டை தொடங்கி விடுங்கள் என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளேன், என்றார்.

கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள த்ரிஷா, எனக்குப் பிடித்தமான சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன்தான். அவருடன் நடித்தது பெருமையாக இருக்கிறது. எனது இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடன் பணியாற்றுவது செம ஜாலியாக உள்ளது என்று கூறியுள்ளார், திரிஷா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum