அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு ஒளிரும் விளக்குகள் – ரஜினி ஏற்பாடு!
Page 1 of 1

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலின் நான்கு கோபுரங்களுக்கும் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த முன்வந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கார்த்திகை தீபத்துக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனம் பெற வசதியாக இந்த விளக்குகள் பெரும் பொருட்செலவில் பொருத்தப்படுவதாகவும், இச்செலவு முழுவதையும் ரஜினியே ஏற்க முன்வந்துள்ளதாகவும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணாமலையாரின் தீவிர பக்தர் ரஜினிகாந்த். இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து ஏராளமான திருப்பணிகளை, பக்தர்கள் வசதிக்காக செய்து வருகிறார்.
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா விழா, பௌர்ணமி கிரிவலத்துக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கிரிவலப் பாதையில் இருள் சூழ்ந்திருந்ததால் பக்தர்கள் இரவு நேரங்களில் வலம் வர சிரமப்பட்டனர்.
இந்த விஷயம் ரஜினியிடம் சொல்லப்பட்டதும், பக்தர்கள் நடந்து சென்று மலையைச் சுற்றி வரப் பயன்படும் 14 கிமீ கிரிவலப் பாதைக்கும் தனது சொந்த செலவில் சோடியம் விளக்குகள் பொருத்தினார் ரஜினி. மொத்தம் 148 மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அவற்றுக்கான மொத்த செலவான ரூ 10 லட்சத்தையும் ரஜினியே ஏற்றார். இது நடந்தது 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம். பின்னர் பக்தர்களுக்கு தண்ணீர் வசதியும் செய்து தந்தார்.
இதன்பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகியது. இரவு நேரங்களிலும் தயக்கமின்றி ஏராளமானோர் கிரிவலம் சென்று மலை வடிவில் குடிகொண்டுள்ள அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர்.
தற்போது மேலும் ஒரு திருப்பணியைச் செய்ய முன்வந்துள்ளார் ரஜினி. அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுரங்களுக்கும் தனது செலவில் ஒளிரும் விளக்குகள் பொருத்துகிறார் ரஜினி.
அதன்படி ஒவ்வொரு கோபுரத்தின் முன்பும் 4 சக்தி வாய்ந்த ஒளிரும் விளக்குகள் (போக்கஸ் லைட்டுகள்) பொருத்தப்பட உள்ளன

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினி பிறந்த நாள்: ஏழைகளுக்கு வேட்டி-சேலை, இலவச உணவு; ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு
» ஒளிரும் நீருற்று
» ஒளிரும் நீரூற்று
» ஒளிரும் சருமம் வேண்டுமா…
» அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்
» ஒளிரும் நீருற்று
» ஒளிரும் நீரூற்று
» ஒளிரும் சருமம் வேண்டுமா…
» அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum