தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரமலத் தற்கொலை முயற்சி? ‌கோலிவுட்டில் புது பரபரப்பு!!

Go down

ரமலத் தற்கொலை முயற்சி? ‌கோலிவுட்டில் புது பரபரப்பு!! Empty ரமலத் தற்கொலை முயற்சி? ‌கோலிவுட்டில் புது பரபரப்பு!!

Post  ishwarya Tue Apr 23, 2013 12:52 pm

தனது காதல் கணவர் பிரபுதேவா, (கள்ளக்)காதலி நயன்தாராவுடன் ஜோடியாக ஊர் சுற்றி வருவதால் விரக்தியடைந்த ரமலத் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாராவுடனான காதலுக்கு பிறகு, பிரபுதேவா ரமலத்தை பார்க்க வருவதை குறைத்துக் கொண்டார். சமீப காலமாக ரமலத் வீட்டுக்கு பிரபுதேவா வருவதே இல்லை. இந்நிலையில்தான் நயன்தாராவை காதலிக்கிறேன் ; அவரைத்தான் கல்யாணம் செய்யப் போகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார் பிரபுதேவா.

காதல் கணவர் பிரபுதேவாவின் இந்த அறிவிப்பு ரமலத்தை ரொம்பவே கவலை ‌கொள்ளச் செய்தது. இதையடுத்து தனது கணவரை நயன்தாராவிடம் இருந்து மீட்டுத் தரும்படி கோர்ட் படியேறினார்.

ரமலத் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் ரமலத்துடனான திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட வில்லை என்பதால் அந்த திருமணம் செல்லாது என்கிற ரீதியில் வழக்கை திசை திருப்ப பிரபுதேவா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாயின.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் பிரபுதேவா என்று இருப்பதாக விளக்கம் அளித்தது ரமலத் தரப்பு.

இந்நிலையில் அண்ணா நகரில் உள்ள வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வரும் ரமலத் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது ரமலத் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

ரமலத்தின் தற்கொலை முயற்சி கோலிவுட்டில் புது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum