மாமியார் மெச்சும் மருமகளாக வேண்டுமா?
Page 1 of 1
மாமியார் மெச்சும் மருமகளாக வேண்டுமா?
மாமியார் வீட்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு மருமகளின் கனவு, தான் மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பது தான். ஒவ்வொரு மாமியாரின் கனவும் தான் மருமகளை மகள் போல பாவிக்க வேண்டும் என்பது தான். ஆனால் நடப்பதோ வேறு! மாமியார் மருமகள் என்ற வார்த்தைக்கு எலியும், பூனையும் என்பது தான் பொருளா...?
`நான் எவ்வளவு பிரியமாக இருந்தாலும் மருமகள் என்னை மதிப்பதில்லை' என்று மாமியாரும்- `நான் எவ்வளவு தான் விட்டுக் கொடுத்து தாழ்ந்து போனாலும் என்னை எப்போதும் குறைசொல்வதே இவர்களுக்கு வேலை' என்று மருமகளும் புலம்புவதை கேட்க முடிகிறது. எவ்வளவு பெரிய குடும்பமானாலும் மாமியாரும், மருமகளும் ஒற்றுமையாக இருப்பதென்பது நடக்காத காரியமாக உள்ளது.
படித்துவிட்டு பல்வேறு துறைகளில் செயலாற்றி பல இக்கட்டான பிரச்சினைகளை தனியாக நின்று சமாளிக்கும் பெண்கள் கூட இன்று மாமியார் மருமகள் பிரச்சினைக்கு தப்புவதில்லை. மனோரீதியாக இதற்கொரு தீர்வு காண முற்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்தி மாமியார் மருமகள் பிரச்சினைக்கு பல காரணங்களை கண்டு பிடித்து அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார்கள்.
இது சம்பந்தமாக பிரபல பெண்மணிகளை சந்தித்து அவர்களுடைய குடும்பவாழ்க்கை, மாமியார் மருமகள் உறவு பற்றி அலசி ஆராய்ந்து குறை நிறைகளை சொல்லியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இது பல குடும்பங்களுக்குப் பொருந்தும் வகையில் உள்ளது. "இப்பொழுதெல்லாம் டி.வி. சீரியல்களில் மாமியார் மருமகள் சண்டைகளை மையப்படுத்தியே காண்பிக்கிறார்கள்.
மாமியார் மருமகளை அதிகாரம் செய்வதும், கொடுமைப்படுத்துவதும், வீட்டை விட்டு துரத்துவதுமாக காட்சிகள் எல்லை மீறி போகின்றன. இப்படிப்பட்ட சீரியல்கள் மக்கள் மத்தியில் வெற்றியடைவது அவர்களின் தவறான ரசனையைத்தான் காட்டுகிறது. இப்படிப்பட்ட வன்முறைகளை சின்னத்திரை தவிர்க்க வேண்டும். மக்கள் மனதில் ஆழமாக பதியும் விதத்தில் குடும்பச் சண்டைகளை விரிவுப்படுத்தி காண்பிக்ககூடாது.
மாமியார் மருமகள் இருவரையும் சமாளிப்பது வீட்டில் உள்ள ஆண்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. இருவரும் முக்கியமானவர்கள். யாரையும் வெறுக்க முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே தான் பிரச்சினைகள் ஏற்படுகிறது. மருமகளுக்கும் மாமனாருக்கும் ஏற்படுவதில்லை ஏன் என்றால் மாமனார் அதிக நேரம் வீட்டில் இருப்பதில்லை.
மேலும் அவர் தனக்கு போட்டியாக மருமகளை நினைப்பதில்லை. மருமகளின் பெரும்பாலான தவறுகளை மாமனார் பெரிதுபடுத்துவதில்லை. அதிக நேரம் மருமகளுடன் நெருங்கி பழகும் மாமியாரின் கண்ணுக்கு தான் குறை-நிறைகள் தென்படுகிறது.
மேலும் தனக்குப் பிறகு இந்த குடும்பத்தை ஏற்று பொறுப்பாக கவனித்துக் கொள்ளும் தகுதி மருமகளுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, புதிய பெண்ணை ஒரு தகுதியுடைய குடும்பத் தலைவியாக்க வேண்டுமே என்ற துடிப்பு அவர்களை ஆட்கொள்ளும் போது அது அதிகாரமாக மாறிவிடுகிறது.
இதை மருமகள் புரிந்துகொண்டால், மாமியார் மேல் உள்ள வெறுப்பு நீங்கி மாமியார் மெச்சும் மருமகளாகலாம். திருமண வாழ்க்கை என்பது மாமியார்-மருமகள் இருவருக்கும் ஒரு திருப்புமுனை. அதற்கு தக்கபடி இருவருமே மாறவேண்டும். இந்தியாவை பொறுத்தவரை மாமியார் மெச்சும் மருமகளாக இருப்பது தான் ஒரு பெண்ணின் பெரிய சாதனை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மறையாத `மாமியார் ராஜ்ஜியம்'
» மாமியார் - மருமகள் நல்லுறவுக்கு
» தனுஷ் மாமியார் மனீஷா கொய்ராலா!
» நல்ல மாமியார் எப்படி இருக்க வேண்டும்
» மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum