நல்ல மாமியார் எப்படி இருக்க வேண்டும்
Page 1 of 1
நல்ல மாமியார் எப்படி இருக்க வேண்டும்
மருமகளை மகளாக மாமியார் பாவிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களுக்கும் இருக்கலாம். ஆனால் மாமியாரை தாயாக பாவிக்கும் மருமகள்கள் எத்தனை பேர்? ஒரு தாய், தனது மகளிடம் எப்போதும் அன்பு காட்டிக் கொண்டே இருப்பதில்லையே. தவறு செய்யும் போது கண்டிக்கவும் செய்கிறாள். அதற்காக ஒரு பெண் தாயை வெறுப்பதில்லை.
ஆனால் இதே கண்டிப்பு மாமியாரிடமிருந்து வந்தால் அது மாமியாரை வெறுக்கும் அளவுக்கு போய்விடுகிறது. நல்ல மாமியார் எப்படி இருக்க வேண்டும்? பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும். மருமகள், மருமகன் இரண்டு பேருக்கும் ஒரே மாமியார் தான். ஆனால் மருமகனிடம் நடந்துகொள்ளும் விதம் வேறு, மருமகளிடம் நடந்துகொள்ளும் விதம் வேறாக அல்லவா இருக்கிறது.
ஒரு மருமகனிடம் தவறுகளை சுட்டிக் காட்டும்போது மிகவும் பக்குவமாக நடந்துகொள்கிறார், மாமியார். காரணம் மகளின் வாழ்க்கை பாதித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை. அதைப் போன்ற பக்குவம் மருமகளிடம் ஏன் வருவதில்லை. மகனுடைய வாழ்வை பற்றிய அக்கறையில்லையா?
இந்த இடத்தில் மாமியார்கள் சமநிலைப் பட வேண்டும். அப்போதுதான் நல்ல மாமியாராக முடியும். மகள், மருமகள் இருவர் மீதும் ஒரு பெண் அன்பு காட்டினாலும் தவறுகள் ஏற்படும் போது மகளிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் மருமகளிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் நிச்சயம் வேறுபாடு இருக்கிறது. மகளை மன்னிக்கும் மனம் மருமகளை மன்னிக்காது.
மகளின் குறைகளை மறைத்து, நிறைகளை பார்க்கும் பெண், மருமகளின் விஷயத்தில் நிறைகளை மறைத்து குறைகளை பெரிதுபடுத்தும் விதமாக நடந்துகொள்கிறார். மேலும் இந்திய பெண்களுக்கு மாமியார்-மருமகள் சண்டையை பார்ப்பது போன்றதொரு சுவாரஸ்யம் வேறு எதிலும் இருப்பதில்லை. இந்த மனப்போக்கு தான் இத்தகைய சீரியல்களின் வெற்றிக்கு காரணம்.
இந்த மனப் போக்கை மாற்ற வேண்டும். அவரவர் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட மாமியார் மருமகள் ஒற்றுமைக்கான வழி முறைகளை தேட வேண்டும். அதுவே நல்ல சமுதாய மலர்ச்சிக்கு காரணமாக இருக்கும். ஒரு பெண் தாயிடம் இருப்பதைவிட மாமியாரிடம் இருக்கும் காலமே அதிகம். அன்பு காட்டும் நேரத்தை விட ஒரு பெண் தவறு செய்யும் போது அதை மென்மையாக கையாளும் பக்குவத்தில்தான் மாமியார்களின் உயர்ந்த உள்ளம் வெளிப்படும்.
மகனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தான் மருமகளிடம் நடந்து கொள்ளும் முறையும் ஒரு காரணம் என்பதை மனதில் கொண்டு பொறுப்போடு பெண்கள் நடந்துகொள்ள வேண்டும். எந்த இக்கட்டான நேரத்திலும் தன் சுயபுத்தியோடு செயல்பட வேண்டுமே தவிர பிறர் சொல்லை கேட்டு தவறாக தடம் மாறக் கூடாது.
இது நம் குடும்பம். போர்க்களமல்ல. இதில் யாருக்கு வெற்றி என்பது நம் இலக்கல்ல. மற்றவர்களின் மனநிம்மதியே நம் வெற்றி என்பதை மனதில் கொண்டு இருவரும் செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கை என்பது மாமியார்-மருமகள் இருவருக்கும் ஒரு திருப்புமுனை. அதற்கு தக்கபடி இருவருமே மாறவேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சாதம் எப்படி இருக்க வேண்டும்
» ஆரோகியமாக இருக்க எப்படி நடக்க வேண்டும்
» எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி,
» மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?
» Resumeரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum