தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

Resumeரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது?

Go down

Resumeரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது? Empty Resumeரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது?

Post  meenu Tue Feb 05, 2013 2:34 pm


வேலை கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எடுத்த எடுப்பிலே யே நிராகரிக்கப்பட ஒரு காரணம், தன் னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் ரெஸ்யூமே (Resume) எந்த வகையிலும் கவராமல் போவதே. எந்த நிறுவனமாக இருந்தாலும் நாம் தரும் ரெஸ்யூமே சரி யாக இருந்தால் நிச்சயம் வேலை கிடைக் கும். அதனால்தான் வேலை தரும் மந்திர ச் சாவி என்று அதனை சொல்கிறார்கள்.
இந்த ரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது? என்று சொ ல்கிறார் ஐசால்வ் நிறுவனத்தின் ஹெச். ஆர். பிரிவி ன் உதவி மேலாளர் ந.பத்ம லட்சுமி.
‘நம்மில் பலர் இதை ரெஸ்யூம் என்று உச்சரிக்கிறார்கள். இது தவறு. ‘ரெஸ்யூமே’ என்று உச்சரிப்பதே சரி! தவிர, பயோடேட்டா (Bio Data), கரிகுலம் விட்டே (Curriculum Vitae), ரெஸ்யூமே ஆகிய மூன்றும் ஒன்று என்று நினைக்கிறார்கள் பலர். பயோடேட்டா என்பது ஒருவருடைய உயரம், எடை, முழுவிவரம் அடங்கிய திரட்டு. இதை காவ லர் வேலைக்கு ஆள் எடுக்கும்போதும், திருமணம் சார்ந்த விஷயங் களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். கரிகுலம் விட்டே என்பது உயர் பதவிக்கு விண் ணப்பிப்பவர்கள் பயன்படுத்துவது. ஆனால், ரெஸ்யூமே என்பதுதான் வேலை தேடுபவர்கள் நிறுவனங்க ளுக்குச் சமர்ப்பிக்க பயன்படுத்துவ து.
மூன்று வகைகள்!
எப்படி இருக்க வேண்டும்?ரெஸ்யூமேக்களில் மூன்று வகைகள் உள்ளன.
1. ரிவர்ஸ் குரோனாலாஜிக்கல் ரெஸ்யூமே (Reverse Chronological resume):
வேலைகளில் முன் அனுபவ முள்ளவர்கள் இது மாதிரியா ன ரெஸ்யூமேக்களை பயன்ப டுத்துவது நல்லது. இந்த ரெஸ்யூமேயில் தற்போது செய்யும் வேலை விவரங்க ளுடன் ஆரம்பித்து, மற்ற விவரங்களை அடுத்தடுத்து சொல்லலாம்.
2. ஃபங்ஷனல் ரெஸ்யூமே (Functional resume):
முதலில் ஸ்கில் ஏரியாக்களை (கல்வி அனுபவங்களை) குறிப்பி ட்டு, பின்னர் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு ஆண்டுகள் வே லை செய்தீர்கள் மற்றும் அது சார்ந்த அனுபவங்களை அடுத்தடுத்து தெரியப்படுத்தலாம்.
3. ஹைபிரிட் ரெஸ்யூமே (Hybrid resume):
மேலே சொன்ன இரண்டு வகையான ரெஸ்யூமே யின் கலவையாக இருப்பதுதான் ஹைபிரிட் ரெஸ்யூமே.
ரெஸ்யூமேயின் மிக முக்கியமான நோக்கம், ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதுதான். ஒரு ரெஸ்யூமேயை ஈர்க்கும்படியாக தயார் செய்தாலே போதும், அது தன் கடமையை கச்சிதமாகச் செய்துவிடு ம்.
ரெஸ்யூமேயில் குறிப்பிட்டுள்ள அனை த்து விவரங்களும் உண்மை யானதாக இருக்கவேண்டும். மற்றவர்களை கவ ர எந்த பொய்யும் சொல்லக் கூடாது. உங்களைப் பற்றிய முக்கியமான வி ஷயங்களை அடிக்கோடிட்டு காட்டலா ம். வித்தியாசப்படுத்திக்காட்ட தடித்த (Bold ) எழுத்துகளில் எழுதலாம்.
முதல்முறை வேலைக்கு விண்ணப்பி ப்பவர் எனில், உங்கள் கல்வி சார்ந்த விவரங்களையும், ஏற்கெனவே வேலை செய்தவராக இருந்தால் ஏற்கெனவே பார்த்த வேலை விவ ரங்களையும் தெரியப்படு த்த வேண்டும். ஒரு வேலையிலிருந்து மற் றொரு வேலைக்கு மாறு ம்போது இடைப்பட்ட காலத்தில் எந்த வே லைக்கும் செல்லாமல் இருந்தால் அதையும் ரெஸ்யூமேயில் குறிப்பிட வேண்டியது அவசி யம். நாம் குறிப்பிடாவிட்டால் ஹெச். ஆர். அதுபற்றி கேட்டு, அதற்கு பதில் சொல்ல வே ண்டிய நிலை ஏற்படும்.
இப்போது சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள, ஏற்கெனவே வேலை செய்த அலுவல கங்களுக்கு இ-மெயில் அல்லது தொ லைபேசி மூலமாக விவரங்களை கேட் டு தெரிந்துகொள்கின்றன.
ஒரு நிறுவனம் ரெஸ்யூமேயை எந்த ஃபார்மெட் வழியாக (இ-மெயில், ஃபேக் ஸ், போஸ்ட் போன்றவை) அனுப்ப வே ண்டும் என்கிறதோ, அதன்படி அனுப்புவ தே நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் அனுப்பிய ரெஸ்யூமே நிறுவனத்தின் பார்வைக்குச்செல்ல தாமதமா கலாம்.
வேலைக்கு ஏற்ற மாதிரி..!
நாம் எந்த வேலைக்குச் செல்கிறோமோ, அந்த வேலைக்கு ஏற்றமாதிரி நம் ரெஸ்யூமே இருப்பது அவ சியம். ஒரே ஃபார்மெட் கொண்ட ரெஸ்யூமேயை அனைத்து வே லைக்கும் பயன்படுத்துவது நல்ல தல்ல. உதாரணத்திற்கு, ஏற்கென வே ஒரு நிறுவனத்தின் சேல்ஸ் பிரிவி ல் வேலை செய்த ஒருவர் மற்றொரு நிறுவனத்திற்கு வே லைக்காக தன் ரெஸ்யூமேயை அளிக்கிறார் எனில், அதில் ஏற்கெனவே வேலை செய்த விவரங்க ளை, அந்த நிறுவனம் உங்களால் அடைந்த லாபங்களை எண்களை கொண்டு குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி குறிப்பிடும்போதுசெய்வினை (Active) சொற் களை பயன்படுத்துவது நல் லது.
எத்தனை பக்கம்..?
ஒரு ரெஸ்யூமே அதிகபட்ச மே இரண்டு பக்கம்தான் இரு க்க வேண்டும். அதற்குள் அனைத்து விவரங்களையும் அப்டுடேட்டாக அடக்கி விடுவது நல்ல து. நம் ரெஸ்யூமேயைப் படிப்பவர் அதற்கு 20 – 30 வினாடிகள் மட்டு மே செலவழிப்பார். எனவே, இரண்டு பக்கத்திற்குள் அனைத்து தகவ ல்களையும் தெளிவாக அடக்குவது நல்லது.”
இனி ரெஸ்யூமேயை தயாரிக்கும்போது மேற்சொன்ன விஷயங்க ளை கவனியுங்கள்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum