களவாணி பட கதாநாயகன் நடிகர் விமல் ரகசிய திருமணம்: மருத்துவ கல்லூரி மாணவியை மணந்தார்
Page 1 of 1

சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் டைரக்டு செய்த `பசங்க’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர், விமல். படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர், மீனாட்சி சுந்தரம்.
செல்போனில், “இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு?” என்று இவர் பேசிய வசனம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரபலம் ஆனது.
இதையடுத்து விமல் நடித்து வெளிவந்த `களவாணி’ படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. `களவாணி’ படத்தை தயாரித்த நசீர் அடுத்து, `எத்தன்’ என்ற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திலும் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது.
விமலுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த அட்சயா என்ற பிரியதர்சினிக்கும் காதல் இருந்து வந்தது. பிரியதர்சினி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
விமல்-பிரியதர்சினி காதலை, பிரியதர்சினியின் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விமல்-பிரியதர்சினி இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி, பிரியதர்சினி சென்னையில் இருந்து கும்பகோணம் சென்றார். கும்பகோணத்தில் தங்கியிருந்த விமலை சந்தித்தார். இருவரும் சுவாமிமலை சென்று அங்குள்ள முருகன் கோவிலில், ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்துக்குப்பின், பிரியதர்சினி சென்னை திரும்பி விட்டார். விமல், கும்பகோணத்தில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். ரகசிய திருமணம் செய்து கொண்டது பற்றி விமல், `தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
“என் சொந்த ஊர், மணப்பாறை. பிரியதர்சினியின் சொந்த ஊர், திண்டுக்கல். இருவரும் உறவினர்கள். அவள், என் அப்பா வழியில் எனக்கு மாமா மகள். சின்ன வயதில் இருந்தே எங்களுக்குள் நட்பு இருந்து வந்தது.
எங்கள் நட்பு, காதலாக மலர்ந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக இரண்டு பேரும் காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினோம். ஆனால், எங்கள் காதலை பிரியதர்சினியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவளை ஒரு டாக்டர் மாப்பிள்ளைக்குத்தான் கொடுப்போம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். சினிமாவில் நான் நல்ல நிலைமையில்தான் இருக்கிறேன். எதிர்காலத்தில் முன்னணி நடிகராக வருவேன். உங்கள் மகளை நல்லபடியாக வைத்து காப்பாற்றுவேன் என்று மாமனார் குடும்பத்தினருடன் போராடினேன்.
“சினிமாக்காரனுக்கு எங்கள் பெண்ணை கொடுக்க மாட்டோம்” என்று கூறி விட்டார்கள். அதோடு நிற்காமல், பிரியதர்சினிக்கு மிக தீவிரமாக டாக்டர் மாப்பிள்ளையை தேட ஆரம்பித்தார்கள்.
எனவேதான் நாங்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். இரண்டு பேர் குடும்பத்து பெரியவர்கள் சம்மதத்துடன், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து இருக்கிறோம்.”
இவ்வாறு விமல் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆலிவுட் நடிகர் கிரம்மருக்கு 4-வது திருமணம்: விமான பணிப்பெண்ணை மணந்தார்
» நடிகர் சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது: காதலியை மணந்தார்
» மும்பையில் இன்று நடந்தது: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு திருமணம் இந்தி டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவை மணந்தார்
» காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் ரகசிய திருமணம் : தற்கொலைக்கு முயன்று காதலில் ஜெயித்தார்
» முன்னாள் மந்திரியின் மருமகளை ரகசிய திருமணம் செய்த என்டிஆர் பேரன் நடிகர் தாரக் ரத்னா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum