தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மது அருந்த ஐஸ் எடுத்து வரச்சொல்லி அடிப்பாங்க-அம்மா ரொம்ப மோசம்!-வனிதா மகனின் ‘வசன ஒத்திகை’!

Go down

மது அருந்த ஐஸ் எடுத்து வரச்சொல்லி அடிப்பாங்க-அம்மா ரொம்ப மோசம்!-வனிதா மகனின் ‘வசன ஒத்திகை’! Empty மது அருந்த ஐஸ் எடுத்து வரச்சொல்லி அடிப்பாங்க-அம்மா ரொம்ப மோசம்!-வனிதா மகனின் ‘வசன ஒத்திகை’!

Post  ishwarya Sat Apr 20, 2013 5:23 pm

பெரியவர்களின் சூழ்ச்சி, கள்ளத்தனம் அனைத்திலும் சிறு குழந்தைகளையும் முழுமையாக ஈடுபடுத்தி, தங்களின் நாடகத்தில் பாத்திரமாக்கி விடுகிறார்கள் பெரியவர்கள்.

இத்தனை நாள் நடிகை வனிதா – விஜயகுமார்- ஆகாஷ் ஆகியோருக்கிடையே இருந்த அருவருப்பான மோதலில் சைலன்ட் பாத்திரமாக வந்து கொண்டிருந்த சிறுவன் விஜயஸ்ரீஹரிக்கு வசனம் பேசவைக்கும் ‘ஒத்திகை’யை பத்திரிகையாளர்கள் முன் அரங்கேற்றினார்கள்.

வனிதாவிடம் அந்த சிறுவனை ஒப்படைக்க இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், பையனுக்கு அம்மாவிடம் போக விருப்பமி்ல்லை என்று பத்திரிகையாளர்கள் முன் சொல்ல வைத்தனர்.

நடிகர் விஜயகுமார் வீட்டில் கடந்த நவம்பர் மாதம் 7-ந் தேதி நடிகை வனிதாவின் 2-வது கணவர் ஆனந்தராஜனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் செய்தார். விஜயகுமார் தரப்பிலிருந்தும் புகார் செய்யப்பட்டது. இதில் விஜயகுமார் தரப்பு புகார் மீது மட்டும் போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை நடிகை வனிதா தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீ ஹரியை (வயது 9) தன்னிடம் இருந்து ஆகாஷ் கடத்தி சென்றுவிட்டதாகவும், சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

அம்மாவுடன் போக மாட்டேன்

இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்தனர். ஜனவரி 5-ந் தேதிக்குள் சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர்.

காலக்கெடு 2 நாட்களே உள்ள நிலையில், சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரியை சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்க வைத்தனர்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறுவன் விஜய் ஸ்ரீஹரி கூறிய பதில்கள்:

கேள்வி: நீ யாருடன் போக ஆசைப்படுகிறாய்?.

பதில்: அப்பாவுடன்.

கேள்வி: ஏன்?.

பதில்: அம்மாவுடன் போனால் டார்ச்சர் செய்வாங்க.

கேள்வி: அம்மா உன்னை நன்றாக பார்த்து கொண்டதாக சொல்கிறாரே?.

பதில்: அப்படியெல்லாம் இல்லை. எனது வளர்ப்பு தந்தை ஆனந்தராஜன், தினமும் நான் பள்ளிக்கூடம் செல்லும் போது, ‘குட்மானிங்’ சொல்ல வேண்டும் என்று கூறுவார். நான் சொல்ல சென்றால், நன்றாக தூங்கிக் கொண்டு இருப்பார். எழுப்பினால், கண் விழிக்க மாட்டார். நான் பள்ளிக்கு சென்றுவிடுவேன். மாலையில் வீட்டிற்கு வந்தால், ஏன்? காலையில் சொல்லிவிட்டு செல்லவில்லை என்று என்னை அடிப்பார். முழங்கால் போடச் சொல்வார். இதை அம்மா (வனிதா) தட்டிக் கேட்க மாட்டார். அவர்கள் இரண்டு பேரும் மாலையிலேயே பார்ட்டிக்கு செல்வதாக கூறி சென்று விடுவார்கள். வீட்டில் 2 பேரும் மது அருந்தும் போது, என்னை பிரிட்ஜில் இருந்து ஐஸ் எடுத்து வரச் சொல்வார்கள். எனக்கு டீ கூட வேலைக்கார பெண்தான் தருவாள்.

கேள்வி: வனிதாவுடன்தான் நீ செல்ல வேண்டும் என்று கோர்ட் கூறியுள்ளதே?.

பதில்: போகமாட்டேன். அப்படி சொன்னால் அங்கேயே அழுது புரளுவேன்…, என்றான் அந்த சிறுவன்.

நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட வசனங்களை ஒப்பிப்பதைப் போல அந்த சிறுவன் பிரஸ் மீட்டில் பேசியது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் பேசி முடித்ததும் அவன் பாட்டி மகேஸ்வரி (ஆகாஷ் அம்மா) கூறுகையில், “எனது பேரனை மையமாக வைத்து நடக்கும் பிரச்சினை உங்களுக்கு எல்லாம் தெரியும். அவன் சுதந்திரமாக படிக்க, எங்களுடன் இருக்க விரும்புகிறான். அங்கு சென்றால் (வனிதாவிடம்) செத்து விடுவேன் என்று புலம்புகிறான்.

சிறுவயதிலேயே அவன் படும் வேதனையை பார்க்க எங்களால் முடியவில்லை. 7 வயது வரை அவன் எங்களுடன்தான் இருந்தான். அதன் பின்னர்தான் அங்கு வளர்ந்தான். எனது பையன் (ஆகாஷ்) வாழ்க்கைதான் வீணாகிவிட்டது. என் பேரன் வாழ்க்கையும் அப்படி ஆகிவிடக்கூடாது.

இப்போதுகூட பள்ளிக்கூடம் சென்றால் எங்கே கடத்தி விடுவார்களோ? என்று பயந்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளான். எனது மகன் ஆகாஷ் இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்…”, என்றார்.

இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஆகாஷ் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum