தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘ராணா’வாகிறது ரஜினியின் ஹரா?

Go down

‘ராணா’வாகிறது ரஜினியின் ஹரா? Empty ‘ராணா’வாகிறது ரஜினியின் ஹரா?

Post  ishwarya Sat Apr 20, 2013 4:55 pm

ரஜினியின் எந்தப் படத்துக்கும் பெயர்க் குழப்பம் இருந்ததே இல்லை. ஒரு முறை தலைப்பு சூட்டப்பட்டால் பின்னர் மாற்றுவதென்பது அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

ஆனால் ஹரா இதில் விதிவிலக்கு. முதலில் இந்தப் படத்துக்கு ஹரா என்று பெயர் சூட்டினார்கள். அது பின்னர் சுல்தான் தி வாரியர் என்றானது.

இப்போது மீண்டும் ஹரா என்றே மாற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ரஜினியும் இதை உறுதி செய்த நிலையில், மீண்டும் படத்தின் பெயர் மாறக்கூடும் எனத் தெரிகிறது.

‘ஹரா நல்ல தலைப்பு என்றாலும், தமிழ்ப் பெயர் இல்லை, சமஸ்கிருதம்’ என்பதால் அதற்கு பதில் வேறு பெயரைச் சூட்ட திட்டமிட்டுள்ளனர். ராணா என்ற பெயர் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. ராணா என்பது ராஜபுத்திர மன்னர்களின் வம்சப் பெயர் ஆகும். சிவாஜி என்ற தலைப்பைப் போன்றது. எனவே தமிழக அரசின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த மாதிரியும் இருக்கும் என்பதால் ராணாவை ஓகே செய்துள்ளார் ரஜினி என்கிறார்கள்.

இதற்கிடையே படத்தில் ரஜினிக்கு இன்னொரு ஜோடியை வைக்கவும் திட்டமிட்டுள்ளாராம் படத்தின் இயக்குநர் பொறுப்பை இப்போது ஏற்றுள்ள கேஎஸ் ரவிக்குமார்.

இந்த வாய்ப்பு அநேகமாக த்ரிஷாவுக்கு கிடைக்கும் என் கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் ரஜினி ரசிகர்களோ ‘த்ரிஷா வேண்டாம்’ என எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். வித்யா பாலன், தீபிகா படுகோன் ஆகியோருடனும் பேசி வருவதாகத் தெரிகிறது.

படத்தில் வரும் அனிமேஷன் ரஜினிக்கு ஜோடியாக விஜயலட்சுமி நடித்துள்ளார். நிஜ ரஜினிக்குதான் இப்போது ஹீரோயின் வேட்டை தொடர்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினியின் ராணா கைவிடப்படுமா? – கோலிவுட்டில் பரபரப்பு
» ரஜினியின் அடுத்த படம் ராணா… தலைப்பு முடிவானது!
» ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» பலகோடியில் சரித்திரகால அரங்குகள்;ரஜினியின் “ராணா” படப்பிடிப்பு எப்போது?
» அக்டோபர் 3-ம் தேதி முதல் ரஜினியின் ராணா… உற்சாகத்தில் கோலிவுட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum