தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை கடற்படையை கண்டித்து ரசிகர்களுடன் விஜய் ஆர்பாட்டம்

Go down

 இலங்கை கடற்படையை கண்டித்து ரசிகர்களுடன் விஜய் ஆர்பாட்டம் Empty இலங்கை கடற்படையை கண்டித்து ரசிகர்களுடன் விஜய் ஆர்பாட்டம்

Post  ishwarya Sat Apr 20, 2013 1:08 pm

தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படைக்கு கண்டம் தெரிவித்து நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் வரும் 22ம் தேதி நாகப்பட்டினத்தில் ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறார்.

நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் இலங்கை கடற்படையால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பல அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயகுமார் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவியும் செய்து வருகின்றனர். ஜெயக்குமார் மனைவிக்கு கருணாநிதி அரசு வேலை கொடுத்துள்ளார். பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் ஜெயக்குமார் மனைவியை நேரில் சந்தித்து ரூ. 2 லட்சம் நிதி அளித்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஜெயக்குமார் குடும்பத்தாரை வரும் 22-ம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரும் உடன் செல்கிறார். விஜய் வருவதையொட்டி அவரது ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வருகின்றனர்.

அதே தினத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து ஆர்பாட்டம் நடக்கின்றது. இதில் விஜய் கலந்துகொண்டு இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறார். இந்த தகவலை நாகை, திருச்சி மாவட்டம் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் ரசிகர்கள் நாகை வருகின்றனர். மேலும், இதில் விஜயின் தந்தையும், மனைவியும் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய் தனது ரசிகர்களுடன் ஆலோசனை
» இலங்கை அரசை கண்டித்து நடிகர் நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி-கமல் கலந்து கொள்கிறார்கள்.
» மீனவர் தாக்குதலைக் கண்டித்து பிரதமர், முதல்வருக்கு தந்தி அனுப்புங்கள் – விஜய் கோரிக்கை
» பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை அசின் டி.வி.க்கு மாறினார்: ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடத்துகிறார்
» ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum