நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி
Page 1 of 1

தற்கொலை செய்து கொண்ட பிரபல கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்தியில் “த தர்ட்டி பிக்சர்” என்ற பெயரில் படமாக்குகின்றனர். சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். இதற்கு நடிகர் விணுசக்கரவர்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சில்க்ஸ்மிதா வாழ்க்கையை இந்தியில் படமாக்கினால் தணிக்கை குழு அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சில்க்ஸ்மிதாவை நான்தான் சினிமாவில் அறிமுகம் செய்தேன். வண்டிசக்கரம் படத்தின் கதையை உருவாக்கி விட்டு சில்க்ஸ்மிதா வேடத்துக்கு நடிகை தேடினேன். ஏ.வி.எம். ஸ்டூடியோ எதிரில் நின்ற போது எதிரே மாவு அரைத்துக் கொண்டு சில்க்ஸ்மிதா சென்றார். அவர் கண்களின் வசீகரம் ஈர்த்தது.
அப்போது அவருக்கு 16 வயதுதான் ஆனது. அப்பா, அம்மா இல்லை. உறவினர்களிடம் பேசி 6 மாதம் பயிற்சி அளித்து வண்டி சக்கரம் படத்தில் அறிமுகம் செய்தேன். விஜயலட்சுமி என்ற அவரது பெயரும் சில்க்ஸ்மிதா என மாற்றப்பட்டது. அந்த படம் 1980-ல் வந்தது. அதன் பிறகு நிறைபட வாய்ப்புகள் வந்தன. 30-வது வயதில் அவர் மர்மமாக இறந்தார்.
சில்க்ஸ்மிதாவின் ரகசியங்கள் அனைத்தும் எனக்குத்தான் தெரியும். எல்லா விஷயங்களையும் என்னிடம் தெரிவித்துள்ளார். அவர் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்துள்ளேன். சிலுக்கு என்ற பெயரை பதிவும் செய்துள்ளேன். சில்க் வேடத்தில் நடிக்க நமீதாவிடம் பேசியுள்ளேன்.
இந்திலும் அவர் வாழ்க்கையை படமாக்குவதாக கேள்விப்பட்டு அதிர்ச்சியானேன். சிலுக்கு வேடத்துக்கு வித்யாபாலனை தேர்வு செய்துள்ளதாகவும் அறிந்தேன். சில்க்ஸ்மிதா வேடத்துக்கு வித்யாபாலன் பொருத்தமானவர் அல்ல. ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே போன்றோர்தான் பொருத்தமாக இருப்பார்கள். இந்தியில் சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்கினால் எதிர்ப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நமீதாவை வைத்து எந்திரனை ரீமேக்கும் சக்தி சிதம்பரம்!
» தேடித் தேடியே நமீதாவை நம்பர் ஒன் ஆக்கிய ரசிகர்கள்!
» சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள் – பாகிஸ்தானில் திரையிட தடை
» தற்கொலை நடிகையின் உண்மை கதை; சில்க்ஸ்மிதா படத்தில் ரஜினியாக நசுருதீன்ஷா
» எந்த நடிகையாலும் சில்க்ஸ்மிதா இடத்தை நிரப்ப முடியாது-சனாகான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum