தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பார்வதியம்மாள் மறைவுக்கு தமிழ் இயக்குநர்கள் சங்கம் அனுதாபம்!

Go down

பார்வதியம்மாள் மறைவுக்கு தமிழ் இயக்குநர்கள் சங்கம் அனுதாபம்! Empty பார்வதியம்மாள் மறைவுக்கு தமிழ் இயக்குநர்கள் சங்கம் அனுதாபம்!

Post  ishwarya Sat Apr 20, 2013 12:04 pm

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் மரணத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்தது.

பார்வதியம்மாளுக்கு இரங்கல் தெரிவிக்க இயக்குநர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.

சங்கத்தின் தலைவர் இயக்குநர் பாரதிராஜா கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆர்கே செல்வமணி, துணைத் தலைவர்கள் விக்ரமன், சசிமோகன், பொருளாளர் எழில், இணைச் செயலாளர்கள் அமீர், என் லிங்குசாமி உள்ளபட அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்று பார்வதியம்மாளுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

பின்னர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “தாய் என்பவள் உயிரின் மூலம், பிரபாகரன் தாய் தமிழீழ வரலாற்றின் மூலம். இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி என வாழ்ந்த பிரபாகரனை பெற்றெடுத்த அன்னை பார்வதி அம்மாள். தமிழின வரலாறு தவமாய் தவமிருந்து வந்த புனிதவதி அவர்.

வேறொரு இனம் ஆள்வதும், தமிழ் மக்களின் மரண ஓலமும் பிரபாகரனைக் காயப்படுத்தியது. எனவே செய் அல்லது செத்து மடி என ஆணித்தரமான காரணங்களோடு தமிழீழத்த்துக்காக களமாடினார்.

பிரபாகரனின் தாய் இறந்து விட்டார் என்ற செய்தி உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் இதயத்தை உடைக்கிறது. ஒட்டு மொத்த குடும்பமும் தமிழ் இனத்துக்காகவே அரப்பணித்துக் கொண்ட தருணங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

மரணம் கையடக்க சாம்பலாகலாம், எங்கள் மண் சர்வாதிகாரத்தால் கரையாது, என்று எல்லா மாவீரர்களையும் ஊக்கப்படுத்திய பிரபாகரனை அன்பால் வாழ வைத்த தாயின் மரணம் தமிழினத்துக்கு பேரிழப்பு.

தமிழீழ மக்களின் இடம், இருப்பு, வாழ்வு மொத்தமும் மாற்றானின் கைகளுக்குப மறுபடியும் போய்விட்ட காலமிது.

எந்தக் காட்டில், எந்தப் பதுங்கு குழியில் எந்தத் தாய் பார்வதியாய் இன்னொரு பிரபாகரனை ஈன்றெடுப்பாள். இனி தமிழீழ வரலாற்றில் முதல் பிள்ளைகளை ஈன்றெடுத்த தாயை முழுமுதல் கடவுளாய் தமிழீழ மக்கள் வணங்குவார்கள்.

மண்ணுக்காக, மக்களுக்காக வாழ்ந்த பிரபாகரனின் தாயை, மருத்துவம் அளிக்காமல் இந்தியா திருப்பி அனுப்பிய சோகம் அனைவரது மனதிலும் உள்ளது.

இந்தத் தாய் மடியில் பிறந்த பிரபாகரனின் அர்ப்பணிப்பும், இவர்களது வாழ்க்கையும் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் சரித்திரமாய் போற்றப்படும்.

காலம் எதன் மீதும் தவறான தீர்ப்பு எழுதிவிடாது.

இந்த வீரத்தாயின் மரணத்துக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது,” என்று கூறியுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நார்வே தமிழ் திரைப்பட விழா 2012… இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்!
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்
» ரஜினி நலம்பெற 500 இயக்குநர்கள், 1000 உதவி இயக்குநர்கள் கூட்டுப் பிரார்த்தனை!
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிடுவதா இல்லையா – முடிவெடுக்க ஒன்று திரளும் தயாரிப்பாளர் சங்கம்
» பிளவுபட்டது நடனக் கலைஞர்கள் சங்கம்! பிறந்தது புதிய சங்கம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum