தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழைய கதாநாயகி ஸ்ரீதேவி மீண்டும் நடிக்கிறார்

Go down

பழைய கதாநாயகி ஸ்ரீதேவி மீண்டும் நடிக்கிறார் Empty பழைய கதாநாயகி ஸ்ரீதேவி மீண்டும் நடிக்கிறார்

Post  ishwarya Sat Apr 20, 2013 11:57 am

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் 1970 மற்றும் 80 களில் முன்னணி கதாநாயகியாக கலக்கியவர் ஸ்ரீதேவி. தமிழில் நாயகியாக அறிமுகமான முதல் படம் “மூன்று முடிச்சு”, 1977-ல் “16 வயதினேலே” படத்தில் நடித்தார்.

சிவப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், கவரிமான், குரு, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை உள்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார்.இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்தார்.

பின்னர் பிரபல இந்தி தயாரிப்பாளரும் நடிகர் அனில்கபூர் சகோதரருமான போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். 1997-ல் நடிப்புக்கு முழுக்கு போட்டார். தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஸ்ரீதேவி மீண்டும் சினிமாவுக்கு வருவதை அவர் கணவர் விரும்பவில்லை.

எனவே எந்த படத்திலும் நடிக்க வில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தை அமிதாப்பச்சனை வைத்து “பா” படத்தை தயாரித்த பால்கி தயாரிக்கிறார். பால்கியின் மனைவி கவுரி ஷிண்டே இயக்குகிறார். கதை பிடித்து இருந்ததால் நடிக்க சம்மதித்தாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum