தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடுநிசி நாய்களுக்கு எதிர்ப்பு வலுக்கிறது!

Go down

 நடுநிசி நாய்களுக்கு எதிர்ப்பு வலுக்கிறது! Empty நடுநிசி நாய்களுக்கு எதிர்ப்பு வலுக்கிறது!

Post  ishwarya Sat Apr 20, 2013 11:54 am

தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் நடுநிசி நாய்கள் படமும், படத்தில் இடம்பெறும் சர்ச்சையான காட்சிகளும்தான். படத்தின் கதைப்படி அம்மாவே மகனுடன் தவறாக இருப்பது போன்ற காட்சிகள் படம் பார்ப்பவர்களை அலற வைக்கிறது.

இதுவொரு சைக்கோ படம் என்று கவுதம்மேனனே விளக்கம் அளித்தாலும், சமூக ஆர்வலர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. மாறாக விளக்குமாற்றுடன் கவுதம் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வக்கிரமான காட்சிகளுடன் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் நடுநிசி நாய்கள் குறித்து இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அருவருப்பையும் வக்கிரத்தையும் பகிரங்கமாக படமெடுத்து விட்டிருக்கிறார் கவுதம் மேனன். இதன் மூலம் இளைஞர்கள் வாழ்க்கையை சீரழித்துள்ளார். வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு. ஆனால் கவுதம்மேனன் அந்த உறவை விரசமாக்கி விஷம் கலந்துள்ளார்.

எங்கேயாவது இது போன்று தவறு நடக்கலாம். அதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்படி செய்தால் அது போன்ற தவறுகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். தந்தையே மகனை பாலியல் தொழில் செய்வோர் கூட்டத்தில் அனுமதித்து சித்ரவதை செய்யும் சீன்கள் எவரும் சிந்திக்காதது. இது போன்ற சீன்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இனி அவர் இந்த மாதிரி படமே எடுக்கக் கூடாது.

இந்தப் படத்தையும் கவுதம் மேனனையும் கண்டித்து, அவர் வீட்டு முன் நாய்களுடன் நள்ளிரவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் நள்ளிரவுப் போராட்டத்துக்கு அனுமதி இல்லாததால், பகலில் நாய்களுடன் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம், என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நடுநிசி நாய்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்க தயாராகிக் கொண்டிருக்கிறதாம். கவுதம் வீட்டை விளக்குமாற்றுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அக்கட்சியை சேர்ந்த பெண்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான வியூகம் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல்வேறு நல அமைப்புகளும் நடுநிசி நாய்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டிருக்கின்றனவாம்.

போராட்டம் பணணிப் பண்ணியே படத்தை ஓட வெச்சிடுவாங்க போல இருக்கே..!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum