பாரதிராஜா- இளையராஜா மோதல் வலுக்கிறது
Page 1 of 1
பாரதிராஜா- இளையராஜா மோதல் வலுக்கிறது
இளையராஜாவும், பாரதிராஜாவும் ஒருவரையொருவர் தாக்கி பேசியதால் ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாரதிராஜா, இளையராஜா இணைந்து பணியாற்றிய படங்கள் திரையுலகில் திருப்பத்தை ஏற்படுத்தியது. நட்பு மாறாமல் இருந்த இருவருக்குள் தற்போது மோதல் வெடித்திருக்கிறது. சமீபத்தில் மதுரையில் நடந்த அன்னக் கொடியும் கொடி வீரனும் பட பாடல் சிடி விழாவுக்கு இளையராஜாவை அழைத்துச் சென்றார் பாரதிராஜா. அங்கு மேடையில் தன்னைப்பற்றி பாரதிராஜா தவறாக பேசியதாக இளையராஜா கோபம் அடைந்தார். இந்தநிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாரதிராஜாவை தாக்கினார். இசை வெளியீட்டு விழா மேடையில் என்னைப்பற்றி பாரதிராஜா பேசிய விஷயங்கள் எல்லாமே என்னிடம் தனியாகப்பேசியிருக்க வேண்டியவை. தன் புகழை தானே பாடுவதிலும், அடுத்தவனை குறை கூறுவதிலுமா இந்த ஜென்மம் கழிய வேண்டும். அவரைப்போல் நானும் குடித்துக்கொண்டும் கூத்தாடிக்கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ என சரமாரியாக தாக்கினார்.
இளையராஜாவின் கருத்து, பாரதிராஜாவை கடும் கோபத்துக்குள்ளாக்கி உள்ளது. அவர் கூறும்போது, நான்தான் பெரிய ஆள் என்று தலைக்கணத்தோடு திரியக்கூடாது. இதைத்தான் அவரிடம் (இளையராஜா)சொன்னேன். கோபித்துக்கொண்டார். நான் ஒன்றும் உத்தமபுத்திரன் என்று சொல்லவில்லை. என்னிடமும் 20 சதவீதம் அழுக்கு இருக்கு, ஆனால் 80 சதவீதம் பரிசுத்தமானவன். ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள், வேலை செய்ய முடிகிறவன் வேலை செய்துகிட்டிருக்கிறான். வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறான் என்றார். பாரதிராஜா, இளையராஜா பதிலுக்கு பதில் ஆவேசமாக தாக்கிக்கொள்ளும்போக்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருவருக்கும் நெருக்கமான கே. பாலசந்தர், பாலுமகேந்திரா, பஞ்சு அருணாசலம் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூட்டிங் நடக்கும்! நடக்காது!! தயாரிப்பாளர்கள்-பெப்சி மோதல் வலுக்கிறது!!

» பாரதிராஜா - இளையராஜா இடையே நடந்தது என்ன?
» பாரதிராஜா, இளையராஜா இடையே புதிய சிக்கல்
» சமந்தா, சித்தார்த் காதல் வலுக்கிறது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum