பெண் குழந்தை பாதுகாப்பு
Page 1 of 1
பெண் குழந்தை பாதுகாப்பு
வயதுக்கு வந்த பெண்ணை திருமணம் ஆகும் வரை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கும் நிலை போய் இப்போது ஒன்னாம் வகுப்பு படிக்கும் குழந்தையில் இருந்து மிகவும் அதிகமாக அவர்களை உற்று நோக்கும் நிலையில் நாம் உள்ளோம்.
30 % கயர்வர்கள் நயவஞ்சகர்கள் செய்யும் இது போன்ற கொடுமையால் மீதி உள்ள 70 % நல்லவர்களையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் நிலை இப்போது உள்ளது. பெண்கள் 10 வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள் .ஓடி ஆடி விளையாடும் வயது என்ன தான் தெரியும் அவர்களுக்கு., பாலியல் பலத்காரத்திலிருந்து எப்படி விடுவிப்பது.
பெற்றோர்கள் தான் விழிப்புணர்வோடு இருக்கனும். சொல்லி புரியும் வயதும் கிடையாது. எவ்வளவு பிஸியா இருந்தாலும் கண்டிப்பாக ஒரு கண் பிள்ளைகள் மேலே இருந்து கொண்டே இருக்க வேண்டும்.. கடைக்கு சின்ன சின்ன சாமான்கள் வாங்க அனுப்பும் போது கூட ஜாக்கிரதையாக அனுப்புங்கள்.
விருந்தினர்கள் வீட்டுக்கு சென்றாலும் குழந்தைகளை உஷாரக கண்காணிக்க வேண்டும். அதே போல் டியூஷன் செண்டருக்கோ, அல்லது வீட்டுக்கு வந்து டியூஷன் சொல்லி கொடுப்பவர்களிடமும் மிகவும் கவனம் தேவை. டியூசனக்கு வெளியில் வாத்தியார்களிடம் அனுப்புவர்களும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்..
தொலை தூரத்தில் ஆட்டோ வைத்து அனுப்பி படிக்கவைப்பவர்களும் சரியான நேரத்துக்கு வந்து சேருகிறார்களா. எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டும், வேலையா இருக்கேன், டீவி பார்க்கிறேன்னு குழந்தைகளை தொலைத்து விடாதீர்கள்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண் குழந்தை பெயர்கள்-C
» பெண் குழந்தை பெயர்கள்-D
» சங்கீதாவுக்கு பெண் குழந்தை
» பெண் குழந்தை யோகம்
» ரம்பாவுக்கு பெண் குழந்தை!
» பெண் குழந்தை பெயர்கள்-D
» சங்கீதாவுக்கு பெண் குழந்தை
» பெண் குழந்தை யோகம்
» ரம்பாவுக்கு பெண் குழந்தை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum